Bengaluru Viral Video: மேற்கு பெங்களூருவில், மகடி டோல் கேட் அருகே இன்று (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் ஒரு வயதான முதியவர் ஒருவரை இளைஞர் ஒருவர் பைக்கில் சுமார் 800 மீட்டர் தூரம் தரதரவென சாலையில் இழுத்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஸ்கூட்டர் ஓட்டி வந்தவ இளைஞர் நாயண்டஹள்ளியில் வசிக்கும் மருத்துவ பிரதிநிதி சாஹில் (25,) காயம் அடைந்த கார் டிரைவர் முத்தண்ணா (71) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தை அடுத்து முத்தண்ணா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
ஈவு இரக்கமின்றி செயல்பட்ட சாஹிலை ஆத்திரமடைந்த பொதுமக்கள் கடுமையாக தாக்கினர். அதன்பின்னர் கோவிந்தராஜநகர் காவல்துறையிடம் ஒப்படைப்பட்டார். அவரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர். பைக்கில் சுமார் 800 மீட்டர் தூரம் முதியவர் இழுத்து செல்லப்பட்ட வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ பார்ப்பவர்களை அனைவரையும் அதிர்ச்சி அடையவைத்துள்ளது.
மேலும் படிக்க: Viral Video: திட்டம் போட்டு திருடிய மனைவி; வசமாக சிக்க வைத்து சென்ற கணவன்!
முதற்கட்ட தகவலின்படி, சாஹில் கேஏ-05-கேயு-0833 (சுசுகி அணுகல்) என்ற பதிவு எண் கொண்ட ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார். காரின் பின்னால் மோதிவிட்டு தப்பிக்க முயற்சி செய்துள்ளார். உடனே கார் டிரைவர் மற்றும் உரிமையாளர் முத்தண்ணா கீழே இறங்கி சாஹிலை பிடிக்க செல்லும் போது அவர் தப்பிக்க நினைத்ததால், அவரது ஸ்கூட்டரின் பின்புற கைப்பிடியைப் பிடித்துள்ளார். ஆனால் சாஹில் ஸ்கூட்டரை நிறுத்தாமல் கிட்டத்தட்ட ஒரு கிலோமீட்டர் தூரம் வரை அவரை இழுத்து சென்றுள்ளார். அதே சாலையில் ஆட்டோ மற்றும் காரில் வந்தவர்கள் அந்த இளைஞரை எச்சரித்த போதிலும், அந்த இளைஞர் அதை கண்டுகொள்ளாமல் சென்று கொண்டிருந்தார் என்பது வீடியோவை பார்த்தால் தெரியும்.
डराने वाला वीडियो बंगलुरू का। स्कूटी के पीछे घसीट रहा है एक बुजुर्ग को।ना पुलिस का डर, ना किसी की परवाह।और तो और पकड़े जाने पर भी कोई अफ़सोस नहीं दिख रहा चेहरे पर।#banglore pic.twitter.com/gcxpORy23u
— SHAMSHER SINGH (@ShamsherSLive) January 17, 2023
இந்த சம்பவம் குறித்து பேசிய காரின் உரிமையாளர் முத்தண்ணா, "நான் எனது வாகனத்தை (மஹிந்திரா பொலேரோ) ஓட்டிக் கொண்டிருந்தேன். மகடி சாலையில் உள்ள டோல் கேட் அருகே மதியம் 1 மணியளவில் அவர் பின்னால் இருந்து எனது வாகனத்தின் மீது மோதியுள்ளார். அதுக்குறித்து அவரிடம் கேட்டபோது, அவர் தனது பைக்கை நிறுத்தாமல் தப்பிக்க முயன்றார். அவர் தப்பிக்க விடக்கூடாது என்று முடிவு செய்தேன். அதனால் ஸ்கூட்டர் கைப்பிடியைப் பிடித்தேன்" என்று கூறினார்.
மேலும் படிக்க: தாயை காப்பாற்றிய சிறுவன்...மனதை உருக வைக்கும் வைரல் வீடியோ
"நான் அவரின் வாகனத்தின் இழுத்து செல்லப்படுவதை அறிந்தும், அவர் தனது பைக்கின் வேகத்தை அதிகரிக்க முயன்றார். மேலும் என் கை மீது இரண்டு முறை ஓங்கி அடிக்க முயன்றார். சாலையில் சென்ற சில வாகன ஓட்டிகள் அவரைத் தடுக்க முயன்றனர். ஆனால் அவர் ஹோசஹள்ளி மெட்ரோ ரயில் நிலையத்திற்கு கிட்டத்தட்ட ஒரு கிலோமீட்டர் வரை என்னை இழுத்து சென்றார். ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநர் ஒருவர் ஸ்கூட்டரைத் தடுத்து நிறுத்தியதைத் தொடர்ந்து அவர் தனது வாகனத்தை நிறுத்தியதாக அவர் கூறினார்.
முத்தப்பாவின் கூற்றுப்படி, ஸ்கூட்டர் ஓட்டுபவர் சாலையைப் பார்த்து பாதுகாப்பாக ஓட்டுவதற்குப் பதிலாக தனது தொலைபேசியில் பிஸியாக இருந்தார். அவர் நிறுத்தி மன்னிப்பு கேட்டிருந்தால், நான் அவரை விட்டிருப்பேன். ஆனால் என்னை இழுத்துச் செல்லும் போது அவர் தனது ஸ்கூட்டரை நிறுத்தவில்லை என்று முத்தண்ணா கூறினார்.
மேலும் படிக்க: Viral Video:பல ஆண்டுகளாக எரியும் ‘நெருப்பு மலை’! அணைக்க முடியாமல் நீடிக்கும் மர்மம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ