‘எனக்கு ஹிந்தி புரியும்’ பத்திரிகையாளரின் கிண்டலுக்கு நிர்மலா சீதாராமன் பதிலடி!

‘சர்ஜிக்கல் ஸ்டிரைக்’ குறித்த செய்திநிறுப்பர் ஹிந்தியில் கேட்ட கேள்விக்கு ‘எனக்கு ஹிந்தி புரியும்’ என  பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலடி கொடுத்துள்ளார்! 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 24, 2018, 12:11 PM IST
‘எனக்கு ஹிந்தி புரியும்’ பத்திரிகையாளரின் கிண்டலுக்கு நிர்மலா சீதாராமன் பதிலடி!  title=

‘சர்ஜிக்கல் ஸ்டிரைக்’ குறித்த செய்திநிறுப்பர் ஹிந்தியில் கேட்ட கேள்விக்கு ‘எனக்கு ஹிந்தி புரியும்’ என  பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலடி கொடுத்துள்ளார்! 

மத்திய பிரதேசத்தில் இன்னும் ஒரு சில நாட்களில் சட்டமன்ற தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில், பாஜக தலைவர் அமித்ஷா, பிரதமர் நரேந்திர மோடி முதல் சிறிய தலைவர்கள் வரை பலர், ‘சர்ஜிக்கல் ஸ்டிரைக்' குறித்து தொடர்ந்து பெருமையாக பிரசாரம் செய்து வருகின்றனர். 

இந்நிலையில் தான், சீதாராமனிடம் ‘சர்ஜிக்கல் ஸ்டிரைக்' குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இந்த விவகாரம் குறித்து தொடர்ந்து பேசிய சீதாராமன், ‘காங்கிரஸ் ஆட்சி காலத்தில் சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தப்பட்டிருத்தால், அது குறித்து அவர்கள் பெருமையாக பேசியிருக்க வேண்டும்' என்று தெரிவித்தார். 

மத்திய பிரதேச போபாலில் நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில், பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், பத்திரிகையாளர் ஒருவரின் கிண்டலான கேள்விக்கு பதிலடி கொடுத்துள்ளார். பத்திரிகையாளர்கள் சந்திப்பின் பொது ஒரு நிருபர், ‘சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடந்தது இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் நடந்தது. ஆனால், இப்போது அது குறித்து ஏன் பிரசாரம் செய்ய வேண்டும்' என்று ஹிந்தியில் கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு சீதாராமன், ‘நீங்கள் இந்தியில் கிண்டல் செய்யும் தொனியில் இந்த கேள்வியைக் கேட்கிறீர்கள். எனக்கு இந்தி தெரியும். நீங்கள் கேட்ட விதத்தால் நான் காயப்பட்டுள்ளேன்' என்றார். 

மேலும், ‘நமது எதிரிகள் நம்மை, தீவிரவாதிகளின் துணை கொண்டு தாக்குகின்றனர். அதற்கு அவர்களுக்கு நாம் பதிலடி கொடுத்தோம். இது குறித்து இந்த நாட்டைச் சேர்ந்த அனைவரும் பெருமை கொள்ள வேண்டும்' என்றார்.

 

Trending News