ICICI தமைமைச் செயல் அதிகாரி பொருப்பில் இருந்து சந்தா கொச்சார் விலகியுள்ளாதாக ICICI வங்கி தெரிவித்துள்ளது!
வீடியோகான் முறைகேட்டு வழக்கில் சிக்கியுள்ள சந்தா கொச்சார், ICICI தமைமைச் செயல் அதிகாரி பொருப்பில் இருந்து விலகியுள்ளதை அடுத்து சந்திப் பக்ஷி ICICI-ன் தமைமைச் செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநராக பதவியேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிதா பதவியேற்றுள்ள சந்திப் பக்ஷி அடுத்த 5 ஆண்டுகளுக்கு (அக்டோபர் 3, 2023) வரை இப்பதவியில் நீடிப்பார் என ICICI தெரிவித்துள்ளது.
வீடியோகான் முறைகேட்டு வழக்கில் விசாரனை சந்தித்து வரும் சந்தா கொச்சர், கடந்த மே 30, 2018 முதல் விடுப்பில் இருந்து வந்த நிலையில் தற்போது இந்த திடீர் அறிவிப்பு வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
ICICI Bank CEO Chanda Kochhar resigns, Sandeep Bakshi replaces her pic.twitter.com/i9ukUS7KXD
— ANI (@ANI) October 4, 2018
வீடியோகான் முறைகேடு...
வீடியோகான் குழுமத்துக்கு ரூ.3,250 கோடி கடன் கொடுத்த விவகாரத்தில் ICICI வங்கியின் தமைமைச் செயல் அதிகாரியும், நிர்வாக இயக்குநருமான சந்தா கொச்சாரின் கணவர் தீபக் கொச்சார் மற்றும் வீடியோகான் குழுமத் தலைவர் வேணுகோபால் தூத் ஆகியோர் மீது CBI வழக்கு தொடுத்துதுள்ளது.
இந்த வழக்கின் விசாரணையில் முன்னதாக கடந்த 2012-ம் ஆண்டு 20 வங்கிகளின் கூட்டமைப்பு இணைந்து வீடியோகான் குழுமத்திற்கு ரூ.40,000 கோடி கடன் வழங்கிருந்ததாகவும், இதில் ஒரு வங்கியான ICICI வீடியோகான் குழுமத்திற்கு ரூ.3,250 கோடியை அளித்ததகாவும் தெரிவிக்கப்பட்டது.
ICICI வங்கியிடம் இருந்து கடன் பெற்ற 6 மாதத்துக்குப் பின்னர் இந்த நிறுவனத்தின் உரிமையினை ரூ.9 லட்சத்துக்கு தீபக் கொச்சாரின் அறக்கட்டளை ஒன்றுக்கு வேணுகோபால் தூத் கொடுத்துள்ளார். பெரும் குழப்பங்களை ஏற்படுத்தியுள்ள இந்த வழக்க தொடர்பாக விசாரணை தொடர்ந்து நடைப்பெற்று வருகின்றது.