முழு அடைப்பால் மாணவர்களின் கல்வி எந்த வகையிலும் பாதிக்காது -மத்திய அரசு...

கொரோனா வைரஸ் பரவுவதால் அறிவிக்கப்பட்ட 21 நாள் முழுஅடைப்பு பகுதியளவு நிறைவடைந்துள்ள நிலையில்., மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் ரமேஷ் போக்ரியால், ஏப்ரல் 14-க்கு அப்பால் பணிநிறுத்தம் நீட்டிக்கப்பட்டால், மாணவர்கள் கல்வி ரீதியாக எந்த இழப்பையும் சந்திக்காமல் இருக்க அமைச்சகம் தயாராக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

Last Updated : Apr 5, 2020, 06:47 PM IST
முழு அடைப்பால் மாணவர்களின் கல்வி எந்த வகையிலும் பாதிக்காது -மத்திய அரசு... title=

கொரோனா வைரஸ் பரவுவதால் அறிவிக்கப்பட்ட 21 நாள் முழுஅடைப்பு பகுதியளவு நிறைவடைந்துள்ள நிலையில்., மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் ரமேஷ் போக்ரியால், ஏப்ரல் 14-க்கு அப்பால் பணிநிறுத்தம் நீட்டிக்கப்பட்டால், மாணவர்கள் கல்வி ரீதியாக எந்த இழப்பையும் சந்திக்காமல் இருக்க அமைச்சகம் தயாராக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தெரிவிக்கையில்., "ஏப்ரல் 14-க்கு அப்பால் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டால் மாணவர்களுக்கு கல்வி இழப்பு ஏற்படாது என்பதை உறுதிப்படுத்த நாங்கள் தயாராக உள்ளோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.

முழு அடைப்பு காலத்தில் கல்வி நிறுவனங்கள் எடுத்துள்ள செயல் திட்டத்தை தொடர்ந்து பரிசீலித்து வருவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும், பணிநிறுத்தம் நீட்டிக்கப்படும் நிலையில், அதுதொடர்பாக ஏப்ரல் 14 அன்று அரசாங்கம் முடிவை எடுக்கும் என்று போக்ரியால் கூறினார்.

இதுகுறித்து அவர் தெரிவிக்கையில்., "கோவிட் -19 நிலைமையை மறுபரிசீலனை செய்த பின்னர் பள்ளிகள், கல்லூரிகளை மீண்டும் திறக்கலாமா என்பது குறித்து ஏப்ரல் 14 அன்று அரசு முடிவு எடுக்க வேண்டும்" என்று கூறினார்.

மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பாதுகாப்பு அரசாங்கத்திற்கு மிக முக்கியமானது என்றும் அவர் வலியுறுத்தினார்.

சுகாதார அமைச்சின் தரவுகளின்படி, ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 5) நாட்டில் உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை 3,374-ஆக உயர்ந்தது. இறப்புகளின் எண்ணிக்கை 77-ஆக அதிகரித்துள்ளது. மேலும், செயலில் உள்ள கொரோனா வழக்குகளின் எண்ணிக்கை 3,030-ஆக உள்ளது. மற்றும் 266 பேர் இதுவரை சிகிச்சைக்கு பின்னர் குணமடைந்துள்ளனர்.

இந்நிலையில் அமைச்சரின் இன்றைய அறிவிப்பு, ஏப்ரல் 14-க்கு பிறகவும் முழு அடைப்பு நீட்டிக்கப்படலாம் என்ற யூகங்களுக்கு வழிவகுக்கிறது எனலாம். முன்னதாக, உத்திர பிரதேச மாநிலம் நொய்டாவில் வரும் ஏப்ரல் 30 வரை முழு அடைப்பு நீட்டிக்கப்படும் என அறிவிப்பு வெளியானது குறிப்பிடத்தக்கது.

Trending News