மனைவி தனக்கு துரோகம் இழைத்து விட்டதாக சந்தேகித்த ஒரு நபர், மனைவியின் தலையை துண்டித்து, அவளது துண்டிக்கப்பட்ட தலையிடன் காவல் நிலையத்திற்கு சென்று சரண்டைந்தான்.
குற்றம் சாட்டப்பட்டவர் தனது மனைவியின் வெட்டப்பட்ட தலையைப் பிடித்து கொண்டு சாலையில் நடந்து செல்லும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது
உத்தரபிரதேசத்தின் (Uttar pradesh) பண்டா மாவட்டத்தை சேர்ந்த, குற்றம் சாட்டப்பட்ட சின்னார் யாதவ் தனது 35 வயது மனைவி விம்லாவுடன், காலை 7.30 மணியளவில் அவர்களது வீட்டில் சண்டையிட்டபோது இந்த சம்பவம் நடந்துள்ளது.
ஆத்திரத்தில், யாதவ் தனது மனைவியின் தலையை கூர்மையான ஆயுதத்தினால் நறுக்கி அதை பாபெரு காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று சரணடைந்தான் என்று காவல் கண்காணிப்பாளர் மகேந்திர பிரதாப் சிங் சவுகான் தெரிவித்தார்.
யாதவை போலீசார் கைது செய்து கொலைக்கு பயன்படுத்திய ஆயுதத்தை மீட்டுள்ளனர். பலியானவரின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஒடிசாவின் பூரி மாவட்டத்தில் இதேபோன்ற ஒரு சம்பவம் நிகழ்ந்தது, அங்கு கணவர் தனது மனைவியுடன் ஏற்பட்ட சண்டையின் போது, ஆத்திரமடைந்து, அவரை கொலை செய்து, தலையை துண்டித்து எடுத்து சென்று காவல் நிலையத்தில் சரணடைந்தார்.
ALSO READ | அட.... ஒரு நாள் CM மாதிரி, ஒரு நாள் PM.. எந்த நாட்டில தெரியுமா..!!!
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYe