அரசு முறை பயணமாக இந்தியா வருகிறார் சவுதி அரேபியா இளவரசர்!

இரண்டு நாள் பயணமாக சவுதி அரேபியா பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்!

Last Updated : Feb 18, 2019, 10:30 AM IST
அரசு முறை பயணமாக இந்தியா வருகிறார் சவுதி அரேபியா இளவரசர்! title=

இரண்டு நாள் பயணமாக சவுதி அரேபியா பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்!

சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான், அரசு முறை பயணமாக பாகிஸ்தான், இந்தியா, மலேசியா, இந்தோனேஷியா ஆகிய 4 நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதில் நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் 2 நாட்களுக்கு இந்தியாவில் அவர் சுற்றுப்பயணம் மேற்கொள்வார் என தகவல்கள் தெரிவிக்கின்றது.
 
இதற்காக தலைநகர் டெல்லி வரும் முகமது பின் சல்மான் பிரதமர் மோடி, குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், துணை குடியரசுத்தலைவர் வெங்கையா நாயுடு உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து பேசுகிறார். பயங்கரவாத எதிர்ப்பு, எரிசக்தி பாதுகாப்பு உள்ளிட்ட அம்சங்கள் குறித்து இந்த சந்திப்பின் போது விரிவான பேச்சுவார்த்தை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பட்டத்து இளவரசரின் இந்திய வருகையால், இந்தியா-சவுதி இடையிலான உறவுகள் மேலும் வலுவடையும், வரலாற்று சிறப்பு மிக்க வாய்ப்பு ஏற்பட உள்ளதாகவும் இந்தியாவுக்கான சவுதி தூதர் சவுத் முகமது அல் சதி தெரிவித்துள்ளார்.

வளர்ச்சி மற்றும் ஸ்திரத்தன்மை தொடர்பான தங்கள் பொதுவான நாட்டத்தின் அடிப்படையில் மிகவும் முக்கியமான கூட்டாளியாகவும், மதிப்பு மிக்க நண்பராகவுமே இந்தியாவை சவுதி அரேபியா பார்ப்பதாக சவுத் முகமது அல் சதி குறிப்பிட்டுள்ளார்.

Trending News