புதுடில்லி: எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் விமான விபத்து அடுத்து உலகின் பல நாடுகள் "போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானங்கள்" தங்கள் நாட்டில் தரையிறங்க தடை விதித்து வருகிறது.
இந்தநிலையில், நேற்று இந்தியாவும் "போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானங்கள்" தரையிறங்க தடை விதித்தது. இந்த தடை உடனடியாக அமலுக்கு வருகிறது. பயணிகளின் பாதுகாப்பில் உறுதியான நடவடிக்கைகள் எடுத்த பிறகு தான் போயிங் நிறுவனம் இயக்க அனுமதி வழங்கப்படும். அதுவரை தடை அமலில் இருக்கும் என்று இந்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த போயிங் விமான விபத்தில் 157 பேர் உயிரிழந்தனர். அதேபோல கடந்த ஆண்டு அக்டோபர் லயன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் போயிங் விமானம் இந்தோனேஷியாவில் விபத்துக்குள்ளானது. அதில் 18௦-க்கு அதிகமானோர் உயிரிழந்தனர். இந்த இரண்டு சம்பவமும் ஐந்து மாதத்துக்குள் அடுத்தடுத்து நிகழ்ந்துள்ளதால், போயிங் விமானத்தின் மீது சந்தேகத்தை ஏற்ப்படுத்தி உள்ளது.
இதனால் உலக நாடுகள் போயிங் விமானத்திற்கு தடை விதித்து வருகிறது. சீனா, பிரிட்டன், ஜெர்மனி, இந்தோனேஷியா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, மலேசியா, பிரான்ஸ் உட்பட பல நாடுகள் தடை விதித்துள்ளது.
இந்தியாவில் ஸ்பைஸ் ஜெட் விமானம் சுமார் 12 போயிங் விமானத்தையும், ஜெட் ஏர்வேஸ் 5 போயிங் விமானத்தையும் இயக்கி வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.