இந்திய-பாக் எல்லையை சட்டவிரோதமாக கடந்த இந்தியர் கைது!

27 ஆண்டுகளுக்கு முன்னர் பாகிஸ்தானுக்குள் நுழைவதற்கு, எல்லை கடந்து சென்ற 55 வயதான இந்தியர் ஒருவர், சட்டவிரோதமான வழியில் இந்தியாவுக்கு திரும்பியுள்ளார். இவரை தற்போது புலனாய்வு பணியகம் (ஐபி) காவலில் எடுத்து விசாரணை செய்து வருகின்றது.

Last Updated : Oct 10, 2017, 11:49 AM IST
 இந்திய-பாக் எல்லையை சட்டவிரோதமாக கடந்த இந்தியர் கைது! title=

ஜெய்சல்மேர்: 27 ஆண்டுகளுக்கு முன்னர் பாகிஸ்தானுக்குள் நுழைவதற்கு, எல்லை கடந்து சென்ற 55 வயதான இந்தியர் ஒருவர், சட்டவிரோதமான வழியில் இந்தியாவுக்கு திரும்பியுள்ளார். இவரை தற்போது புலனாய்வு பணியகம் (ஐபி) காவலில் எடுத்து விசாரணை செய்து வருகின்றது.

ஹசன் கான் என்னும் இவர் ஆறு மாதங்களுக்கு முன்னர் கடந்த ஏப்ரல் மாதத்தில்  இந்தியா திரும்பி வந்தார்.

அவர் கைது செய்யப்படுவதற்கு முன்னர் வரை குஜராத், மகாராஷ்டிரம் உட்பட பல இடங்களில் மறைத்து வாழ்ந்துள்ளார்.

அமர்நாத் மாவட்டத்தில் உள்ள கரோடோ கிராமத்தில் தனது நோய்வாய்ப்பட்ட சகோதரரை சந்திக்க 1990-ஆம் ஆண்டு பாகிஸ்தானிய எல்லைக்குட்பட்ட இந்திய-பாகிஸ்தானிய எல்லையை கடக்க இவர் சட்டவிரோத முகவர்களுக்கு பாக்கிஸ்தான் ரூபாய் 5,000 வழங்கியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.

இவர் தற்போது ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு விங் (RAW) விசாராணை கைதியாக இருப்பது குறிப்பிடத்தக்கது!

Trending News