Indian Railway: 335 ரயில்கள் ரத்து: 30 ரயில்கள் தடம் மாற்றப்பட்டன

இந்திய ரயில்வே இன்று 335 ரயில்களை ரத்து செய்தது. 30 ரயில்கள் பாதை மாற்றி திருப்பி விடப்பட்டன

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 23, 2021, 09:03 AM IST
  • இன்று 335 ரயில்கள் ரத்து
  • 30 ரயில்கள் தடம் மாறி இயங்கும்
  • 4 ரயில்களின் நேரமும் மாற்றியமைக்கப்பட்டது
Indian Railway: 335 ரயில்கள் ரத்து: 30 ரயில்கள் தடம் மாற்றப்பட்டன title=

புதுடெல்லி: இந்திய ரயில்வே இன்று 335 ரயில்களை ரத்து செய்தது. 30 ரயில்கள் பாதை மாற்றி திருப்பி விடப்பட்டன. இது தொடர்பான அறிக்கையையும், ரயில் இயங்கும் விவரத்தின் பட்டியலையும் ஐஆர்சிடிசி வெளியிட்டது.

ரயில்வேயின் அதிகாரப்பூர்வ இணையதளத்தின்படி enquiry.indianrail.gov.in, 30 ரயில்கள் தங்கள் பாதையை மாற்றியுள்ளன. இது தவிர, 4 ரயில்களின் நேரமும் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.

இந்தியன் ரயில்வே, ரத்து செய்யப்பட்ட ரயில்களின் பட்டியலை தினசரி வெளியிடுகிறது. ரயிலில் பயணம் (Travel in Train) செய்வதற்கு முன், ரத்து செய்யப்பட்ட ரயில்களின் பட்டியலை சரிபார்ப்பது நல்லது. 

வானிலை மற்றும் பனிமூட்டம் காரணமாக பல ரயில்கள் திட்டமிட்ட நேரத்தில் இயக்கப்படுவதில் சிக்கல் ஏற்படுகிறது. அதிலும் வட இந்தியாவில் குளிர் வாட்டியெடுக்கும் இந்த சமயத்தில் ரயில்களின் புறப்பாடு மற்றும் வந்து சேரும் சமயம் மாறிக் கொண்டேயிருக்கின்றன.

Also Read | ஊட்டி மலை ரயில் சேவை மீண்டும் தொடக்கம்

எனவே பயணிகளின் வசதியை முன்னிட்டு, ரயில் தொடர்பான அறிவிப்புகள் 139 என்ற ரயில்வே ஹெல்ப்லைன் எண்ணிலிருந்து பெற்றுக் கொள்ளலாம்.

இதனிடையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மக்களின் வசதிக்காக தென்னக ரயில்வே சிறப்பு ரயில்களை இயக்குவதாக அறிவித்துள்ளது.

இந்த ஆண்டு ஜனவரி 14ஆம் தேதி முதல் ஜனவரி 17 வரை பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. சென்னையிலிருந்து பலர் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வது வழக்ககம்.

லட்சக்கணக்கான மக்கள் சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு செல்வதால், சென்னையில் இருந்து நாகர்கோவில், நெல்லைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என  தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

ALSO READ | அரசு ஊழியர்களுக்கு 300 நாட்கள் Earned Leave!புதிய விதி எப்போது அமலுக்கு வரும்? 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News