அரசு ஊழியர்களுக்கு 300 நாட்கள் Earned Leave!புதிய விதி எப்போது அமலுக்கு வரும்?

புதிய ஊதியக் குறியீட்டின் கீழ், ஊழியர்களின் சம்பளக் கட்டமைப்பில் மாற்றம் இருக்கும். அவர்களின் டேக் ஹோம் சம்பளம் குறைக்கப்படலாம். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 6, 2021, 12:50 PM IST
  • புதிய ஊதியக் குறியீடு குறித்து மிகப்பெரிய விவாதங்கள் நடந்து வருகின்றன.
  • இந்த விதி அடுத்த ஆண்டு அதாவது 2022 இல் செயல்படுத்தப்படக்கூடும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
  • புதிய ஊதியக் குறியீட்டின் சில விதிகள் அமலுக்கு வந்தவுடன் உங்கள் வாழ்க்கை பல மாற்றங்கள் இருக்கும்.
அரசு ஊழியர்களுக்கு 300 நாட்கள் Earned Leave!புதிய விதி எப்போது அமலுக்கு வரும்? title=

New Wage Code India Updates: புதிய ஊதியக் குறியீடு குறித்து மிகப்பெரிய விவாதங்கள் நடந்து வருகின்றன. முன்னதாக இது 2021 அக்டோபரில் அமல்படுத்தப்பட இருந்தது. ஆனால் மாநில அரசுகளுக்கு இதில் ஏற்பட்ட சிக்கல்களால் அது செயல்படுத்தப்படவில்லை. இப்போது இந்த விதி அடுத்த ஆண்டு அதாவது 2022 இல் செயல்படுத்தப்படக்கூடும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த காலகட்டத்திற்குள், அனைத்து மாநிலங்களும் தங்கள் வரைவு விதிகளைத் தயார் செய்யும். இதன் கீழ் ஊழியர்களின் சம்பளம். விடுமுறை போன்றவற்றில் மாற்றங்கள் இருக்கும். அதன் விவரங்களை இந்த பதிவில் அறியலாம்.

1. ஒரு வருடத்தின் விடுமுறை நாட்கள் 300 ஆக அதிகரிக்கும்
ஊழியர்களின் ஈட்டிய விடுப்பு (Earned Leave) 240-லிருந்து 300 ஆக உயர்த்தப்படக்கூடும். தொழிலாளர் அமைச்சகம், தொழிலாளர் சங்கம் மற்றும் தொழில்துறை பிரதிநிதிகள் இடையே தொழிலாளர் சட்ட விதிகளில் மாற்றங்கள் குறித்து பல விதிகள் விவாதிக்கப்பட்டன. இதில் ஊழியர்களின் ஈட்டிய விடுப்பை 240லிருந்து 300ஆக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது.

2. சம்பள அமைப்பில் மாற்றம் 
புதிய ஊதியக் குறியீட்டின் கீழ், ஊழியர்களின் சம்பளக் கட்டமைப்பில் மாற்றம் இருக்கும். அவர்களின் டேக் ஹோம் சம்பளம் குறைக்கப்படலாம். ஏனெனில் ஊதியக் குறியீடு சட்டம், 2019 இன் படி, ஒரு பணியாளரின் அடிப்படைச் சம்பளம் நிறுவனத்தின் செலவில் (CTC) 50% க்கும் குறைவாக இருக்கக்கூடாது. தற்போது, ​​பல நிறுவனங்கள் அடிப்படை சம்பளத்தை குறைத்து, அதிக அலவன்ஸ்களை வழங்குவதால், நிறுவனத்தின் சுமை குறைகிறது. இதில் மாற்றம் ஏற்படும்.

3. புதிய ஊதியக் குறியீட்டில் உள்ள சிறப்பு என்ன
புதிய ஊதியக் குறியீட்டில் (New Wage Code) பல விதிகள் வழங்கப்பட்டுள்ளன. இது அலுவலகத்தில் பணிபுரியும் சம்பள வர்க்கம், ஆலைகள் மற்றும் தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு பல மாற்றங்களைக் கொண்டு வரும். ஊழியர்களின் சம்பளம் முதல் அவர்களின் விடுமுறை நாட்கள் மற்றும் வேலை, வேலை நேரம் என அனைத்திகும் மாற்றம் இருக்கும். புதிய ஊதியக் குறியீட்டின் சில விதிகள் அமலுக்கு வந்தவுடன் உங்கள் வாழ்க்கை பல மாற்றங்கள் இருக்கும்.

ALSO READ:December 31-க்குள் இந்த பணிகளை செய்து முடிக்கவும்: இல்லையென்றால், வீண் பண விரயம் 

4. வேலை நேரம் அதிகரிக்கும், வார விடுமுறையும் அதிகரிக்கும்

எமக்கு கிடைத்துள்ள தகவலின்படி, புதிய ஊதியக் குறியீட்டின்படி, வேலை நேரம் 12 மணி நேரமாக அதிகரிக்கும். உத்தேச தொழிலாளர் சட்டத்தில் வாரத்தில் 48 மணி நேரம் வேலை என்ற விதி அமலில் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளதாகவும், உண்மையில் 12 மணி நேர வேலை, 3 நாட்கள் விடுமுறை என்ற விதிக்கு சில தொழிற்சங்கங்கள் கேள்வி எழுப்பியிருந்ததாகவும் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அரசு (Central Govenrment) வெளியிட்டுள்ள விளக்கத்தில், வாரத்தில் 48 மணி நேரம் வேலை என்ற விதியே இருக்கும் என்றும், ஒருவர் 8 மணி நேரம் வேலை செய்தால், வாரத்தில் 6 நாட்கள் வேலை செய்ய வேண்டும் என்றும், ஒரு நாள் விடுமுறை அளிக்கப்படும் என்றும் கூறியுள்ளது.

ஒரு நிறுவனம் ஒரு நாளைக்கு 12 மணி நேரம் வேலையை ஏற்றுக்கொண்டால், மீதமுள்ள 3 நாட்களுக்கு ஊழியருக்கு விடுப்பு கொடுக்க வேண்டும். வேலை நேரம் அதிகரித்தால், வேலை நாட்களும் 6க்கு பதிலாக 5 அல்லது 4 ஆக குறையும். ஆனால் இதற்காக, ஊழியர் மற்றும் நிறுவனத்திற்கு இடையே ஒரு ஒப்பந்தம் இருப்பது அவசியம் என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ:LPG சிலிண்டர் மானியம் மீண்டும் கிடைக்கிறதா? 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News