இந்தியாவின் மிகப்பெரிய ஒற்றை நாள் மீட்பு விகிதம் 63.2%; 6 நாட்களில் 168,885 பேருக்கு பாதிப்பு

ஆறு நாட்களிலும் தினசரி 25,000 க்கும் மேற்பட்ட பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு உள்ளது. இந்த காலகட்டத்தில் மட்டும் மொத்தம் 168,885 பேருக்கு கோவிட்-19 தொற்று நோய் பரவி உள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jul 15, 2020, 03:13 PM IST
இந்தியாவின் மிகப்பெரிய ஒற்றை நாள் மீட்பு விகிதம் 63.2%; 6 நாட்களில் 168,885 பேருக்கு பாதிப்பு title=

India's biggest single-day recovery: மொத்த கொரோனா (Total Coronavirus cases in India) பாதிப்பில், இதுவரை இல்லாத அளவில் ஒரு நாளில் மிக அதிகமாக நேற்றை 29,429 பேர் பாதிப்புடன், இந்தியாவின் எண்ணிக்கை 906,752 இலிருந்து 936,181 ஆக உயர்ந்துள்ளது. இது 3.2% அதிகரிப்பு. இறப்பு எண்ணிக்கை 24,309 ஐ எட்டியுள்ளது. ஒரு நாளில் 582 பேர் உயிரிழந்துள்ளனர். உலக வரைப்படத்தில் மொத்த பாதிப்பில் மூன்றாவது இடத்திலும், இறப்பு எண்ணிக்கையில் எட்டாவது இடத்திலும் இந்தியா உள்ளது. தொடர்ச்சியான ஆறு நாட்களிலும் தினசரி 25,000 க்கும் மேற்பட்ட பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு உள்ளது. இந்த காலகட்டத்தில் மட்டும் மொத்தம் 168,885 பேருக்கு கோவிட்-19 தொற்று நோய் பரவி உள்ளது.

இந்தியா முழுவதும் சிகிச்சை (Corona active cases) பெற்று வருபவர்களின் எண்ணிக்கையின் நிகர அதிகரிப்பு 8,275 ஆகும். இது ஞாயிற்றுக்கிழமை 9,956 ஆக இருந்தது. அதேபோல மகாராஷ்டிரா (2,028), கர்நாடகா (1,269), ஆந்திரா (870), உத்தரபிரதேசம் (786), பீகார் (779) ஆகிய மாநிலங்களில் 24 மணிநேரத்தில் அதிக எண்ணிக்கையிலான முன்னேற்றங்கள் பதிவாகியுள்ளன.

ALSO READ | COVID19: கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் 582 உயிரிழப்பு

புதிதாக 20,572 பேர் குணமடைந்து மீண்டுள்ளதை அடுத்து, இதுவரை ஒரு நாளில், இந்தியாவின் மீட்பு விகிதம் (India recovery rate) 63.2% ஆக உயர்ந்துள்ளது. இறப்பு விகிதம் 2.6% ஆக மாறாமல் உள்ளது. இந்தியாவில் கடந்த 5 நாட்களா தொற்று பாதிப்பின் தினசரி  சராசரி மொத்த தொற்று எண்ணிக்கையில் 3.4% ஆக உள்ளது.

மொத்த கொரோனா தொற்று பாதிப்பில் இந்தியாவின் இரட்டிப்பு காலம் 21.7 நாட்களாகவும், குணமடைந்து வருவோரின் காலம் 26.4 நாட்களாகவும், இறப்பு 28.6 நாட்களாகவும் உள்ளது.

ALSO READ | மதுரை மாவட்டத்தில் 7 ஆயிரத்தை தாண்டியது கொரோனா பாதிப்பு

தமிழ்நாடு (4,526), அசாம் (1,001), பீகார் (1,325), குஜராத் (915), கேரள மத்தியப் பிரதேசம் (798), (608), ஹரியானா (734), சத்தீஸ்கர் (162), இமாச்சலப் பிரதேசம் (66) என ஒரே நாளில் அதிக எண்ணிக்கையிலான கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

கொரோனா தொற்று பாதிப்பில் ஒட்டுமொத்தமாக பார்த்தால், மகாராஷ்டிரா (6,741), தமிழ்நாடு (4,526), கர்நாடகா (2,496), ஆந்திரா (1,916), டெல்லி (1,606) ஆகிய ஐந்து மாநிலங்களில் அதிக பாதிப்பு 24 மணி நேரத்தில் ஏற்பட்டு உள்ளது. 

ALSO READ | உலகளவில் 1.34 கோடி பேருக்கு கொரோனா... 5,80,248 பேர் உயிரிழப்பு

தற்போது மோசமான மீட்பு விகிதங்களைக் கொண்ட ஐந்து மாநிலங்கள் வரிசையில் கர்நாடகா (39.45%), கேரளா (49.70%), ஆந்திரா (52.90%), மகாராஷ்டிரா (55.67%), மற்றும் ஜம்மு & காஷ்மீர் (55.70%) உள்ளது.

மகாராஷ்டிரா (267,665), தமிழ்நாடு (147,324), டெல்லி (115,346), கர்நாடகா (44,077), குஜராத் (43,637) ஆகியவை மொத்த தொற்று (biggest single-day spikes) எண்ணிக்கையில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள ஐந்து மாநிலங்கள்.

ALSO READ | முதல்வர் பழனிசாமிக்கு கொரோனா பரிசோதனை... வெளியான பகீர் தகவல்!

ஒட்டுமொத்தமாக மிகவும் பாதிக்கப்பட்ட மாநிலமான மகாராஷ்டிராவில் (Maharashtra) கடந்த 10 நாட்களில் மட்டும் 67,601 பேருக்கு தொற்று பரவி உள்ளது. 

ஒரு நாளில் இதுவரை இல்லாத அளவுக்கு 4,526 பேர் பாதிக்கப்பட்டு உள்ள தமிழகம், (Tamil Nadu), இது  கடந்த 19 நாட்களில் தினசை 3,000 க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

ALSO READ | முன்னெச்சரிக்கை நடவடிக்கையை பின்பற்றாவிட்டால் உச்சகட்ட அழிவை ஏற்படுத்தும்: WHO

Trending News