தடுப்பூசி ஒலிம்பிக்ஸ் இருந்தால் இந்தியாவிற்கு தான் தங்கம்: ஆனந்த் மகிந்திரா

பிரதமர் மோடியின் 71-வது பிறந்தநாளான நேற்று, நாடு முழுவதும் பெரிய அளவில் தடுப்பூசி  முகாம்கள்  அமைக்கப்பட்டன. 

Written by - ZEE Bureau | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Sep 18, 2021, 09:15 AM IST
தடுப்பூசி ஒலிம்பிக்ஸ்  இருந்தால் இந்தியாவிற்கு தான் தங்கம்: ஆனந்த் மகிந்திரா

 

இந்தியாவில், தடுப்பூசி போடும் பணி மிக தீவிரம்மாக மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், தடுப்பூசி போடுவதில் வரலாறு படைத்ததுள்ளது.ஒரேநாளில் 2.50 கோடிக்கும் அதிகமான பேருக்கு தடுப்பூசி செலுத்தி உலக சாதனை படைத்துள்ளது

பிரதமர் மோடியின் (PM Narendra Modi) 71-வது பிறந்தநாளான நேற்று உலகளவில் ஒரேநாளில் 2.50 கோடிக்கும் அதிகமான கொரோனா தடுப்பூசி செலுத்தி இந்தியா உலக சாதனை படைத்துள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறியுள்ளார். 

இந்தியாவின் தடுப்பூசி இயக்கத்தின் உலக சாதனையை பாராட்டிய தொழிலதிபரும் மஹிந்திரா குழுமத்தின் தலைவருமான ஆனந்த் மஹிந்திரா, 'தடுப்பூசி ஒலிம்பிக்' என ஒன்று  இருந்தால், இந்தியா தான் தங்கப் பதக்கத்தை வெல்லும் என்று பெருமையுடன் பதிவு செய்துள்ளார்.

கோவின் போர்ட்டலின் ஸ்கிரீன்  ஷாட்டை பகிர்ந்துகொண்டு, அவர் எழுதிய பதிவில், “சிறிது நேரத்திற்கு முன்பு, நான் கோவின் தளத்தை பார்க்கையில், நாம் மூன்று நாட்களில் ஒரு ஆஸ்திரேலியா முழுவதற்குமான  தடுப்பூசி போடுவதற்கு இணையான அளவில் நாம் தடுப்பூசி செலுத்தி வருவதை கவனித்தேன். ஆனால், நேற்று, ஒரே நாளில் ஒரு ஆஸ்திரேலியா முழுவதற்குமான தடுப்பூசிக்கு சமமான அளவில் தடுப்பூசி போட்டோம். 'தடுப்பூசி ஒலிம்பிக்ஸ்' என ஒன்று இருந்தால், இந்தியா தங்கப் பதக்கம் வென்றிருக்கும்.  இந்தியா புதிய உலக சாதனையை படைத்துள்ளது " என பதிவிட்டுள்ளார். 

ALSO READ | SCO Summit 2021: ஆப்கானிஸ்தான் மக்களுக்கு இன்னும் உதவ விரும்புகிறோம்: பிரதமர் மோடி

பிரதமர் மோடியின் 71-வது பிறந்தநாளான நேற்று, நாடு முழுவதும் பெரிய அளவில் தடுப்பூசி  முகாம்கள்  அமைக்கப்பட்டன. இதற்கு முன் ஒரு கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் ஒரே நாளில் செலுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில், நேற்று மாலையிலேயேயே 2 கோடியைக் கடந்துவிட்டதாக மத்திய அரசின் கோவின் இணைய தளத்தில் தகவல் வெளியிடப்பட்டது.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் “வாழ்த்துகள் இந்தியா! பிரதமர் மோடியின் பிறந்தநாளான இன்று இந்தியா தடுப்பூசி செலுத்துவதில் வரலாற்று சாதனை நிகழ்த்தியுள்ளது. ஒரேநாளில் 2.50 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டு வரலாறு படைத்து, உலகளவில் சாதனை நிகழ்த்தியுள்ளது” எனத் தெரிவித்தார்.

பிரதமர் மோடி ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் “ தடுப்பூசி செலுத்தியதில் வரலாற்று சாதனை நிகழ்த்தியது ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமை தரும் விஷயமாகும் . மருத்துவர்கள், செவிலியர்கள்,  தடுப்பூசி செலுத்தும் இயகக்த்தின் திட்ட நிர்வாகிகள், சுகாதாரப் பணியாளர்கள், முன்களப்பணியாளர்கள்  என அனைவரும் இந்த தடுப்பூசி வரலாற்று சாதனைக்கு காரணமானவர்கள். தடுப்பூசி செலுத்துவதை மேலும் தீவிரமாக மேற்கொண்டு கொரோனாவைத் தோற்கடிப்போம்” என பதிவிட்டுள்ளார். 

ALSO READ | COVID-19 Update: இன்று 1,669 பேர் கொரோனாவால் பாதிப்பு மற்றும் 17 பேர் உயிரிழப்பு

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

More Stories

Trending News