எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்த மோடி அரசாங்கம் - வருமான வரி விலக்கு ரூ.5 லட்சமாக உயர்வு

இன்று தாக்கல் செய்யப்பட்ட இடைக்காலப் பட்ஜெட்டில் வருமான வரி விலக்கை இரட்டிப்பாக்கப்பட்டு உள்ளது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 1, 2019, 01:10 PM IST
எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்த மோடி அரசாங்கம் - வருமான வரி விலக்கு ரூ.5 லட்சமாக உயர்வு title=

அமைச்சராக உள்ள பியுஷ் கோயல் இன்று தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் பல சலுகைகள் இருக்கும் என பொதுமக்கள் எதிர்பார்த்தனர். குறிப்பாக நடுத்தர வர்க்கம் பயன்பெறும் வகையில் வருமான வரி விலக்கு வரம்பை இரட்டிப்பாக்கலாம் என கூறப்பட்டது. அதேபோல மோடி அரசாங்கம் வருமான வரி விலக்கை இரட்டிப்பாக்கி உள்ளது.

முன்னதாக தனிநபர் வருமான வரி விலக்குப் பெறுவதற்கான உச்ச வரம்பு ரூ.2.5 லட்சமாக இருந்தது. இன்று தாக்கல் செய்யப்பட்ட இடைக்காலப் பட்ஜெட்டில் வருமான வரி விலக்கை இரட்டிப்பாக்கப்பட்டு உள்ளது. அதாவது தற்போது தற்போது வருமான வரி விலக்கு ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆண்டு வருமானம் ரூ.5 லட்சம் வரை இருப்பவர்கள் இனி வருமான வரி செலுத்த வேண்டிய அவசியமில்லை. இதனால் மூன்று கோடி நடுத்தர வர்க்கத்தினர் பயன்பெறுவார்கள். முதன்முறையாக இடைக்கால நிதிநிலை அறிக்கையில் தனிநபர் வருமான வரி உச்சவரம்பு உயர்த்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

மேலும் ஏற்கனவே 40,000 ரூபாயாக இருந்த நிரந்தரக் கழிவு 50,000 ரூபாயாக அதிகரிக்கப்பட்டு உள்ளது. அதேபோல வாடகை மூலமான வருமானம் மாதம் 20,000 ரூபாய் பெறுவோருக்கும் வருமான வரி கிடையாது. தன்னிடம் உள்ள இரண்டாவது வீட்டை வாடகைக்கு விடும் போது அதற்கு விதிக்கப்படும் வருமான வரி உச்சவரம்பு 1,80,000 ரூபாயிலிருந்து 2,40,000 ரூபாயாக உயர்த்தப்பட்டது.

Trending News