இளைஞர்களுக்கு தேவையான வேலை வாய்பினை உருவாக்கும் திறன் ஆளும் பாஜக அரசிற்கு இல்லை என, பாஜக அதிருப்தி தலைவர் யஷ்வந்த் சின்ஹா விமர்சித்துள்ளார்!
வரும் மக்களவை தேர்தலில் ஆளும் பாஜக அரசின் ஆட்சியினை நீக்க நாட்டின் பிரதாண கட்சிகள் ஒன்றுகூடி வருகின்றது. அந்த வகையில் இருதினங்களுக்கு முன்னர் மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் திருணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி மாபெரும் கூட்டத்தினை ஏற்பாடு செய்திருந்தார். திமுக தலைவர் முக ஸ்டாலின் உள்பட 22 கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்று பேசினர்.
இக்கூட்டத்தில் பங்கேற்ற முன்னாள் பாஜக நிர்வாகி யஷ்வந்த் சின்ஹா, “சுதந்திரத்துக்குப் பிறகு ஆட்சியமைத்த எந்த அரசும் வளர்ச்சித் திட்டங்களில் தற்போது ஆட்சியில் உள்ள அரசு போல விளையாடவில்லை” என்று கூறி மத்திய அரசை கடுமையாக சாடினார். மேலும், "ஆளும் பாஜக அரசின் மொத்தக் கொள்கையையும் அகற்ற வேண்டும்" என பேசினார்.
பாஜக-கட்சின் துணை தலைவராக இருந்த பெரும் தலைவர் தற்போது பாஜக-விற்கு எதிராக நின்றிருக்கும் நிலையில், அவரது நிலைபாடு குறித்து ஊடகங்கள் விவாதங்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவரிடம் ஆளும் பாஜக அரசு குறித்து கேட்கப்பட்டது. அப்போது அவர் தெரிவிக்கையில்., ஆளும் கட்சி கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறிவிட்டது. இரண்டு கோடி வேலைவாய்பினை உருவாக்குவோம் என உறுதி அளித்த கட்சியினர் தற்போது இளைஞர்களை போலி வாக்குறிதகளால் ஏமாற்றியுள்ளனர். இதேப்போல் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தனது துறையை மேம்படுத்த மறந்துவிட்டார். சமீபத்தில் நடைப்பெற்ற தேர்தல்களில் பின்னடைவு கண்டு வரும் பாஜக-விற்கு பெறுப்பேற்று கட்சியின் தலைவர் அமித் ஷா பதவி விலக மறந்துவிட்டார் என தொடர்ந்து குற்றச்சாட்டுகளை அடுக்கிச் சென்றார்.
பின்னர் இளைஞர்களுக்கு தேவையான வேலைவாய்ப்பினை எந்த தலைவரால் தற்போது உண்டாக்க இயலும் என செய்தியாளர் கேட்டதற்கு, "தற்போதைக்கு யாரும் இல்லை" என பதில் அளித்த சின்ஹா... வேலைவாய்ப்பினை உண்டாக்க தகுதியுடைய எதிர்கால தலைவர்கள் பட்டியலில் தனது பெயரை முதல் இடத்தில் குறித்து வைத்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய அவர்., நாட்டின் விவசாயிகள் நிலைகளை மேம்படுத்தும் அரசே தற்போது இந்தியாவிற்கு தேவை, நாட்டில் பல்வேறு விஷயங்கள் மாற்றப்பட வேண்டியுள்ளது, இத்துனை செயல்களையும் செய்ய வேண்டிய ஒரு தலைவரை நாம் தேடி கண்டுபிடிக்க வேண்டும் என தெரிவித்தார்.
சின்ஹாவின் பதில்கள் இந்திய அரசியல் களத்தில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையில்., யஷ்வந் சின்ஹாவின் இந்த பதில்கள் அவரது பிரதமர் பதவி ஆசையினை வெளிப்படுத்துகிறது என அரசியல் விமர்சகர்கள் விமர்சித்து வருகின்றனர்.