ஜி சாட்-19 செயற்கைக்கோள் இன்று விண்ணில் பாய்கிறது

Last Updated : Jun 5, 2017, 09:16 AM IST
ஜி சாட்-19 செயற்கைக்கோள் இன்று விண்ணில் பாய்கிறது title=

ஜிஎஸ்எல்வி மாக் 3 டி1 ராக்கெட் மூலம் ஜி சாட்-19 செயற்கைக்கோளை விண்ணில் செலுத்துவதற்கான கவுன்ட்டவுன் நேற்று தொடங்கியது.

ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவண் விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து இன்று மாலை 5.28 மணிக்கு, மாக் 3 டி1 ராக்கெட் மூலம் ஜி சாட்-19 செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட உள்ளது. இதற்கான 25 மணி நேர கவுன்டவுன் நேற்று மாலை 3.58 மணிக்கு துவங்கியது.

இஸ்ரோவால் முழுவதும் உள்நாட்டிலேயே கிரையோஜெனிக் தொழில் நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட இந்த ராக்கெட், ஜிசாட்-19 செயற்கைக்கோளை விண்ணில் நிலைநிறுத்த உள்ளது. 3,136 கிலோ எடை கொண்ட இது, இணைய தொலைத்தொடர்பு செயற்கைகோள் ஆகும். 

இந்த ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டால், மனிதனை விண்ணுக்கு அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டுள்ள இஸ்ரோவின் கனவும் விரைவில் சாத்தியமாகும் என எதிர்பாரக்கப்படுகிறது.

இந்நிலையில் இந்த ராக்கெட் மூலம் இன்று மாலை 5.28 மணிக்கு 3,136 கிலோ எடை கொண்ட ஜி சாட் -19 தகவல் தொடர்பு செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. ராக்கெட் மூன்று பாகங்களாகப் பிரிந்து செயற்கைக்கோளை சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தும்.

Trending News