காஷ்மீர் மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி துவங்கி நடைபெற்று வருகிறது. மாலை 4 மணிக்கு ஓட்டுப்பதிவு நிறைவடையும்.
J&K:Voting begins in districts of Anantnag-4 wards, Budgam-1 ward, Bandipore-16 wards, Baramulla-15, Jammu-153, Kargil-13, Kupwara-18, Leh-13, Poonch-26, Rajouri-59 & Srinagar-3 wards, in the first of the four phases of urban local bodies elections:Visuals from Budgam's Ward no 5 pic.twitter.com/Nfc12xr58n
— ANI (@ANI) October 8, 2018
கவர்னர் ஆட்சி நடந்து வரும் காஷ்மீர் மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. 1,145 வார்டுகளுக்கு 4 கட்டங்களாக வாக்குப்பதிவு நடக்கிறது. முதற்கட்டமாக இன்று ஜம்மு மாவட்டத்துக்கு உட்பட்ட 149 வார்டுகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. 4 கட்ட தேர்தல்கள் அக்டோபர 16 ம் தேதி நிறைவடைகிறது.
#JammuAndKashmir: People queue outside a polling booth in Rajouri to cast their votes in the first phase of urban local body elections pic.twitter.com/xU6wLZtxbL
— ANI (@ANI) October 8, 2018
#Jammu: People queue outside a polling booth in Gorakh Nagar to cast their votes in the first phase of urban local body elections pic.twitter.com/9PpoMvxswY
— ANI (@ANI) October 8, 2018
#JammuAndKashmir: Voting for urban local bodies underway at a polling booth in Gandhi Nagar's Ward no. 2, in Jammu district. pic.twitter.com/c3oXDC4pe3
— ANI (@ANI) October 8, 2018
J&K:Voting begins in districts of Anantnag-4 wards, Budgam-1 ward, Bandipore-16 wards, Baramulla-15, Jammu-153, Kargil-13, Kupwara-18, Leh-13, Poonch-26, Rajouri-59 & Srinagar-3 wards, in the first of the four phases of urban local bodies elections:Visuals from Budgam's Ward no 5 pic.twitter.com/Nfc12xr58n
— ANI (@ANI) October 8, 2018
4 லட்சத்து 42 ஆயிரத்து 159 வாக்காளர்களுக்காக 584 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்தலையொட்டி ஜம்மு மாவட்டத்தில் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு முதல்முறையாக மின்னணு வாக்கு எந்திரத்தில் வாக்குப்பதிவு நடக்கிறது.
மக்கள் ஜனநாயக கட்சி மற்றும் தேசிய மாநாட்டு கட்சி ஆகிய இரு முக்கிய கட்சிகளும் இந்த உள்ளாட்சி தேர்தலை புறக்கணித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
தேர்தலை சுமுகமாக நடத்தி முடிப்பதற்கான அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும், எனவே மக்கள் எந்தவித அச்சமும் இன்றி வாக்களிக்க முன்வரவேண்டும் என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.