புது டெல்லி: ஜார்க்கண்ட் (Jharkhand) தேர்தலில் காங்கிரஸ்-ஜே.எம்.எம். கூட்டணி (JMM-Congress alliance) பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்று மாநிலத்தில் ஆட்சியமைக்கிறது. ஜார்க்கண்டிட் மாநிலத்தின் சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கை நேற்று (திங்கள்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்கி இரவு வரை நடைபெற்றது. மாநிலத்தில் ஆளும் கட்சியாக இருந்த பாஜக (BJP) தனியாக போட்டியிட்டு, வெறும் 25 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. காங்கிரஸ் (Congress), ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா (Jharkhand Mukti Morcha ) மற்றும் ராஸ்ட்ரிய ஜனதா தளம் கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலில் நின்றது. மொத்தம் 81 தொகுதிகளில் ஆட்சி அமைக்க 41 இடங்கள் வேண்டும் என்ற நிலையில், காங்கிரஸ் 16 தொகுதிகளிலும், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா 30 தொகுதிகளிலும், ராஸ்ட்ரிய ஜனதா தளம் 1 ஒரு தொகுதி என மொத்தம் 47 இடங்களில் பெரும்பான்மையை விட அதிக தொகுதியில் வெற்றி பெற்றது. சுயேச்சை உட்பட மற்ற கட்சிகள் 9 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
ஜார்க்கண்ட் தேர்தலில் (Jharkhand Election Results 2019) முக்தி மோர்ச்சா கட்சி முதல் முறையாக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. அக்கட்சியின் தலைவர் ஹேமந்த் சோரன் (Hemant Soren) போட்டியிட்ட இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளார். காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றதை அடுத்து, அக்கூட்டணியில் அங்கம் வகிக்கும் முக்தி மோர்ச்சா கட்சி தலைவர் ஹேமந்த் சோரன் மாநிலத்தின் முதல்வராக பதவியேற்க உள்ளார்.
நேற்று செய்தியாளர்கள் மத்தியில் பேசிய ஹேமந்த் சோரன் (Hemant Soren), "அதிக இடங்களில் வெற்றி பெற செய்து மாநிலத்தில் ஆட்சி அமைக்கும் அதிகாரத்தை தந்த மக்களுக்கு நன்றியை தெரிவித்தார். இந்த வெற்றி ஷிபு சோரனின் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பின் விளைவாகும் கிடைத்தது என்று கூறினார். இந்த அரசு எந்த நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டதோ, அந்த நோக்கங்களை நிறைவேற்றுவதற்கான நேரம் வந்துவிட்டது. மாநில மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டிய நாள் இது. மாநிலத்திற்கு ஒரு புதிய அத்தியாயம் தொடங்கி உள்ளது. எந்த நம்பிக்கையில் மக்கள் தங்கள் வாக்குகளை எங்களுக்கு அளித்தார்களோ, அவர்களின் நம்பிக்கையை நிச்சயமாக காப்பாற்றுவேன் என உறுதியளிக்கிறேன். சாதி மத இன வேறுபாடின்றி அனைவருக்காகவும் பாடுபடப் போவதாகவும் ஹேமந்த் சோரன் கூறினார்.
மேலும் கூட்டணியில் இடம் பெற்றிந்த காங்கிரஸ் மற்றும் ஆர்.ஜே.டி.க்கான அனைத்து நிர்வாகிகளும், லாலு ஜி, சோனியா ஜி மற்றும் ராகுல் ஜி ஆகியோருக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன் என்றார்.
காங்கிரஸ் கூட்டணி வெற்றி குறித்து பிரதமர் மோடி (Narendra Modi) தனது ட்விட்டர் பக்கத்தில், "ஜார்கண்ட் மக்களுக்கு அவர்கள் பல ஆண்டுகளாக பாஜகவுக்கு சேவை செய்ய வாய்ப்பளித்ததற்கு நன்றி கூறுகிறேன்" என்று கூறியுள்ளார். கடின உழைப்பாளியான கட்சி ஊழியர்களின் முயற்சிகளையும் நான் பாராட்டுகிறேன். வரவிருக்கும் காலத்தில் மாநிலத்தின் சேவை மற்றும் மக்களை மையமாகக் கொண்ட பிரச்சினைகளை நாங்கள் தொடர்ந்து எழுப்புவோம்.'' என்று பதிவிட்டுள்ளார்.
உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.