வேலைவாய்ப்புகளை உருவாக்கும் முயற்சியில் மத்திய அரசு தோற்றுவிட்டது -மன்மோகன் சிங்

மத்தியில் ஆளும் பாஜக அரசு இளைஞருகளுக்கான வேலைவாய்ப்பினை உருவாக்கும் முயற்சியில் தோற்றுவிட்டது என முன்னாள் பிரதமர் மன் மோகன் சிங் தெரிவித்துள்ளார்!

Last Updated : Feb 18, 2019, 10:02 AM IST
வேலைவாய்ப்புகளை உருவாக்கும் முயற்சியில் மத்திய அரசு தோற்றுவிட்டது -மன்மோகன் சிங் title=

மத்தியில் ஆளும் பாஜக அரசு இளைஞருகளுக்கான வேலைவாய்ப்பினை உருவாக்கும் முயற்சியில் தோற்றுவிட்டது என முன்னாள் பிரதமர் மன் மோகன் சிங் தெரிவித்துள்ளார்!

நேற்று டெல்லியில் நடந்த மேலாண்மை கல்லூரி பட்டமளிப்பு விழா ஒன்றில் கலந்துக்கொண்ட முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மன்மோகன் சிங்., நாட்டின் பொருளாதார நிலை, நாடு எதிர்கொண்டு வரும் பிரச்சினைகள் பற்றி விரிவாக உரையாற்றினார்.

அப்போது அவர் பேசுகையில்... விவசாயிகளின் கடுமையான நெருக்கடி, குறைந்து வரும் வேலை வாய்ப்புகள், சுற்றுச்சூழல் சீர்குலைவு எல்லாவற்றுக்கும் மேலாக பணித்தளங்களில் பிரிவினை சக்திகள் ஆகியவை இன்று நாடு எதிர்கொள்ளும் சவால்களாக அமைந்துள்ளன என தெரிவித்தார்.

மேலும் விவசாயிகளின் தற்கொலைகளும், விவசாயிகள் அடிக்கடி நடத்தி வரும் போராட்டங்களும் நமது பொருளாதார கட்டமைப்பு சமநிலையின்மையை பிரதிபலிக்கிறது என குறிப்பிட்ட அவர், இதனை ஆழமாக ஆய்வு செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

இந்தியாவில் வேலை வாய்ப்பு இல்லாதோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகி வருகிறது. கிராமப்புறங்களில் கடன்கள் பெருகி வருவதும், நகர்ப்புறங்களில் நிலவுகிற குழப்பங்களும் சேர்ந்து எதிர்பார்ப்பு மிக்க இளைஞர்களை அமைதி இழந்து போகச்செய்கிறது. தொழில் துறையில் கூடுதல் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் முயற்சி தோல்வி பெற்றுள்ளது. அதேவேலையில் தொழில்துறையும் வேகமான வளர்ச்சியை அடையவில்லை.

தொழில் துறையையும், வர்த்தக துறையையும் ஊக்குவிப்பதற்கு நல்ல ஆழ்ந்த சிந்தனையில் தோன்றும் கொள்கைகளும், நல்ல செயல்பாட்டு உத்திகளும் தேவை. தற்போதைய உலகம் வேகமாக மாறிக்கொண்டிருக்கிற உலகம். ஒரு பக்கம் உலகப்பொருளாதாரத்தில் நாம் நம்மை ஒருங்கிணைத்துக் கொண்டிருக்கிறோம். 

உலக சந்தைக்கு நம்மை வெளிப்படுத்தி வரும் அதேவேலையில் மற்றொரு பக்கம் உள்நாட்டில் மிகப்பெரிய பொருளாதார, சமூக சவால்களை நாம் எதிர்கொண்டு வருகிறோம் என குறிப்பிட்டு பேசினார். 

தொடர்ந்து பேசிய அவர் வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் உலக பொருளாதாரத்தில் 3-வது முக்கிய நாடாக இந்தியா வந்து விடும் என கூறப்படுகிற முக்கியமான காலகட்டத்தில் நீங்கள் (மாணவர்கள்) வர்த்தக உலகில் இணைகிறீர்கள். இதுவரை இல்லாத வகையில் மிக வேகமாக மாற்றங்களை சந்தித்து வருகிற உலகில் உங்களுக்கு வாய்ப்புகளும், சவால்களும் நிரம்ப இருக்கிறது என மாணவர்களுக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் பேசினார்.

Trending News