Karnataka Election 2023: திருமணம் செய்து கொண்ட மணமக்கள், ஓட்டுச்சாவடிக்கு வந்து தங்களின் ஜனநாயக உரிமையான ஓட்டை செலுத்தியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. கர்நாடக சட்டசபை தேர்தலுக்கான வாக்குபதிவு காலை 7 மணி முதல் நடைபெற்று வருகிறது. கர்நாடகம் மாநிலத்தில் உள்ள 224 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், வாக்குச் சாவடிகளுக்கு மக்கள் வந்து தங்களது வாக்கு உரிமைகளைப் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு வாக்குகள் பதிவாகவில்லை. வெயிலின் தாக்கம் காரணமாக பல மாவட்டங்களில் வாக்குப்பதிவு குறைந்துள்ளதால் மாலையில் வாக்கு எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இந்நிலையில் புதுமண ஜோடிகள் நேரடியாக வந்து தங்கள் வாக்குகளை செலுத்தியதை அனைவரும் பாராட்டி வருகின்றனர். இன்று மதியம் ஒரு மணி வரை 37.5 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன.
கோலாரில் நடந்த சம்பவம்:
கோலார் நகரில் உள்ள வினோப் நகர் வாக்குச்சாவடியில் புதிய மணமக்கள் வாக்குச் சாவடி எண் 240ல் வாக்களித்தனர். புது மாப்பளையின் பெயர் மஞ்சுநாத் மற்றும் மணப்பெண்ணின் பெயர் ரூபிணி. இவர்களுக்கு இன்று தான் திருமணம் நடந்தது.
மேலும் படிக்க: கர்நாடக தேர்தல் 2023: எந்த மாவட்டத்தில் எவ்வளவு வாக்குப்பதிவு? முழு விவரம்
மைசூரில் நடந்த சம்பவம்:
தற்போது மைசூர் பிரியாபட்டினத்தில் புதுமண தம்பதிகள் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்தனர். பியாபட்டினத்தில் உள்ள குடகு கவுடா சமாஜில் உள்ள திருமண வீட்டில் மணமகன் பிபின் கே.என். தனது மனைவி அக்சதா பி.யுடன் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்தார். அவருடன் பிபினின் தந்தை கே.எஸ்.நாகேந்திரன், தாய் சி.எஸ்.கீதா ஆகியோரும் வந்து வாக்களித்தனர்.
மங்களூரில் நடந்த சம்பவம்:
மங்களூரை சேர்ந்த அக்ஷதா பி மென்பொருள் பொறியாளர். கே.என்.பிபின் வங்கியில் பணிபுரிபவர், இருவரின் திருமணம் இன்று நடைபெற்றது. திருமணமாகி இருந்தாலும் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்தார்.
மேலும் படிக்க: Karnataka Election 2023 Live Voting: கர்நாடக சட்டசபை தேர்தல் 2023 நேரலை முழு விவரம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ