Karnataka Election 2023 Live Voting Updates and News: கர்நாடக மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்ட பரப்புரை கடந்த திங்கள்கிழமையுடன் முடிவடைந்த நிலையில், இன்று மாநிலம் முழுவதும் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. கர்நாடகாவில் மொத்தம் 224 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் இன்று ஒரு கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
இந்தத் தேர்தலில் பலமுனை போட்டி இருப்பதால், முக்கிய அரசியல் கட்சிகளான பாஜக, காங்கிரஸ் மற்றும் ஜேடி(எஸ்) ஆகிய கட்சிகள் இதில் முன்னணியில் உள்ளனர். காலை 7 மணிக்கு தொடங்கி வாக்குப்பதிவு மாலை 6 மணிவரை நடைபெறுகிறது. அடுத்தாண்டு, மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பாஜக ஆளும் முக்கிய மாநிலங்களில் கர்நாடகாவும் ஒன்றாகும்.
தென்னிந்தியாவில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்த கர்நாடகாவை கைப்பற்றுவது பாஜகவுக்கு மிகவும் அவசியமானதாகவும் இருக்கிறது. எதிர்க்கட்சியான காங்கிரஸ் கர்நாடகா தேர்தல் மூலம் புத்துணர்ச்சி பெறும் என்ற நம்பிக்கையில் உள்ளது. மேலும், இந்த தேர்தலில் ஹெச். டி. குமாரசாமி தலைமையிலான ஜேடி (எஸ்) கட்சியும் முக்கிய பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாடு முழுவதும் உள்ள அரசியல் நோக்கர்களாலும், சாமனியர்களாகும் அதிக எதிர்பார்ப்புக்கு உள்ளாக்கிய கர்நாடக சட்டப்பேரவை தேர்தலின் வாக்குப்பதிவு குறித்து உடனடித் தகவல்களை இங்கு தெரிந்துகொள்ளலாம்.
மேலும் படிக்க | போர்க்களமாய் பரபரப்பின் உச்சத்தில் கர்நாடக சட்டமன்றத் தொகுதிகள்! வெற்றி யாருக்கு?
மேலும் படிக்க | Karnataka Voting Day: நம்பிக்கையுடன் முன்னேறும் காங்கிரஸ்! பதற்றத்தில் பாஜக