இரு சுயேட்சை MLA-க்களை அடுத்து மேலும் காங்கிரசை சேர்ந்த 5 MLA-க்கள் கர்நாடக முதல்வர் HD குமாரசாமிக்கு அளித்து வந்த ஆதரவினை திரும்ப பெருவதாக தகவல்கள் வந்துள்ளன
கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் - ஜனதா தளம் கூட்டணிக்கு அளித்து வந்த ஆதரவினை திரும்ப பெருவதாக சுயேட்சை MLA-க்கள் நகேஷ் மற்றும் R ஷங்கர் நேற்று அறிவித்து, அம்மாநில ஆளுநருக்கு இருவரும் கடிதம் எழுதினர். இச்சம்பவம் கர்நாடகா அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலைக் கிளப்பி உள்ளது.
இச்சம்பவத்தின் பின்னணியில் பாஜக கட்சியினர் இருக்கலாம் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.
இவ்விரு MLA-க்களில் விலகல் ஆட்சியல் எவ்வித மாற்றத்தை ஏற்படுத்தாது என்றபோதிலும், இவர்களது விலகல் மற்றவர்களின் விலகலுக்கு ஆரம்ப புள்ளியாய் அமையலாம் என அரசியல் விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், காங்கிரசை சேர்ந்த 5 MLA-க்கள் தங்கள் ஆதரவை பாஜகவுக்கு அளிக்க உள்ளதாகவும், காங்கிரஸ் கட்சியில் இருந்து விலக உள்ளதாகவும் நம்பத்தகுந்த வட்டாரத்தில் இருந்து தகவல்கள் கிடைத்துள்ளது.
222 தொகுதிகள் கொண்ட கர்நாடக சட்டசபை தேர்தலில் பாஜக 104 தொகுதிகளிலும், காங்கிரஸ் 78 தொகுதிகளிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 37 இடங்களிலும் வெற்றிப்பெற்றன. யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் காங்கிரஸ் - ஜனதா தளம் கட்சிகள் கூட்டணி அமைத்து பாஜக-விற்கு எதிராக ஆட்சி அமைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.