புதுடில்லி: நாட்டின் பிரபல தொழிலதிபர் குமார மங்கலம் பிர்லாவின் (Kumar Mangalam Birla) மகள் அனன்யா பிர்லா, அமெரிக்காவில் (America) உள்ள உணவகத்தில், தான் இனவெறி பாகுபாடுக்கு ஆளாக்கப்பட்டதாக குற்றம் சாட்டியுள்ளார். வாஷிங்டனில் உள்ள ஸ்கோபா இத்தாலியன் ரூட்ஸ் உணவகம் தன்னை தன் குடும்பத்துடன் வெளியேற்றியது என்று அனன்யா ட்வீட் செய்து தெரிவித்தார்.
அனன்யா Scopa Restaurant என்ற அந்த உணவகத்தை டேக் செய்து ட்வீட் செய்துள்ளார். தனது ட்வீட்டில் அவர், ‘Scopa Italian Restaurant என்னையும் எனது குடும்பத்தினரையும் தங்கள் வளாகத்திலிருந்து வெளியேற்றியது. இவர்களது இனவெறியைக் (Racism) கண்டு மனம் வருத்தப்படுகிறது. நீங்கள் உங்கள் வாடிக்கையாளர்களிடம் சரியான முறையில் நடந்துகொள்ள வேண்டும். இது சரியான ஒரு விஷயம் அல்ல’ என எழுதினார்.
This restaurant @ScopaRestaurant literally threw my family and I, out of their premises. So racist. So sad. You really need to treat your customers right. Very racist. This is not okay.
— Ananya Birla (@ananya_birla) October 24, 2020
We waited for 3 hours to eat at your restaurant. @chefantonia Your waiter Joshua Silverman was extremely rude to my mother, bordering racist. This isn’t okay.
— Ananya Birla (@ananya_birla) October 24, 2020
அனன்யா தனது அடுத்த ட்வீட்டில், உணவகத்தின் பணியாளர் தனது தாயை முரட்டுத்தனமாக நடத்தினார் என்று கூறினார். அவர், 'உங்கள் உணவகத்தில் சாப்பிட 3 மணி நேரம் காத்திருந்தோம். செஃப் அன்டோனீஸ் உங்கள் பணியாளர் ஜோசுவா சில்வர்மேனின் நடத்தை இனவெறி கொண்டதாக இருந்தது. அவர் என் தாயிடன் மோசமாக நடந்துகொண்டார். இது சரியல்ல.’ என்று ட்வீட் செய்துள்ளார்.
ALSO READ: விஜயவாடா: படகு சவாரிக்கு கொண்டு செல்லப்பட்ட கனக துர்கா, மல்லேஸ்வரர் தேவியின் சிலைகள்
யார் அனன்யா பிர்லா
அனன்யா பிர்லா ஆதித்யா பிர்லா குழுமத் தலைவர் குமார மங்கலம் பிர்லாவின் மகள் மற்றும் பாடகி ஆவார். அனன்யா பிர்லாவின் முதல் பாடல் லிவின் தி லைஃப் 2016 இல் வெளிவந்தது. இந்த பாடலுக்குப் பிறகு, அவரை ஒரு பாடகியாக யுனிவர்சல் மியூசிக் இந்தியா நிறுவனத்துடன் இணைந்தார். இது தவிர, இ-காமர்ஸ் நிறுவனமான கர்ரோகார்ட்டின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் அனன்யா பிர்லா உள்ளார்.
இனவெறி உலகம் முழுதும் கோர தாண்டவம் ஆடுகிறது. இது மனிதர்களை தங்கள் இயல்பை மறக்கச் செய்து விடுகிறது. மனித குலம் ஒன்றுதான், மனிதர்களுக்கு இடையில் எந்த விதமான பாகுபாடும் பார்க்கக்கூடாது என்ற கருத்தை அனைவரும் தங்கள் மனதில் ஆழமாக பதித்துக்கொள்ள வேண்டும். இப்படிப்பட்ட சம்பவங்கள் நடக்கும் போது அவை உலகின் பார்வைக்கு கொண்டுவரப்பட வேண்டும். இந்த சம்பவத்தை தன் ட்வீட் மூலம் வெளி உலகின் கவனத்திற்கு கொண்டு வந்த அனன்யா பிர்லாவுக்கு எமது வாழ்த்துக்கள்.
ALSO READ: இந்த post office சேமிப்புத் திட்டத்தில் maturity-ன் போது உங்கள் பணம் இரட்டிப்பாகும்!!
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR