PFI-ஐ போல RSS அமைப்பையும் தடை செய்ய வேண்டும் -லாலு பிரசாத் யாதவ் வலியுறுத்தல்

Demands Ban On RSS: பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பை போலவே ஆர்எஸ்எஸ் அமைப்பையும் தடை செய்ய வேண்டும் என பீகார் மாநில முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் வலியுறுத்தி  உள்ளார். 

Written by - Shiva Murugesan | Last Updated : Sep 28, 2022, 05:35 PM IST
  • பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு ஐந்தாண்டுகளுக்கு தடை.
  • ஆர்எஸ்எஸ் அமைப்பையும் விசாரித்து தடை செய்ய வேண்டும் -லாலு பிரசாத் யாதவ்.
  • பாஜக அரசை அகற்ற வேண்டியது அவசியம் -லாலு பிரசாத் யாதவ்
PFI-ஐ போல RSS அமைப்பையும் தடை செய்ய வேண்டும் -லாலு பிரசாத் யாதவ் வலியுறுத்தல் title=

Popular Front of India Banned: பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு உள்ளிட்ட 8 அமைப்புகளை ஐந்தாண்டுகளுக்கு தடைவிதித்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பல்வேறு அமைப்பினர் போராட்டம் செய்து வருகின்றனர். மத்திய அரசின் PFI தடை முடிவு செய்தி வெளியானவுடனே இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாக்கத் தொடங்கியது. மத்திய அரசின் இந்த முடிவுக்கு பல தலைவர்கள், கட்சிகள் மற்றும் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அந்த வரிசையில் பீகார் முன்னாள் முதல்வரும், ஆர்ஜேடி தலைவருமான லாலு பிரசாத் யாதவ் ஆர்எஸ்எஸ் அமைப்பை தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய லாலு பிரசாத் யாதவ், முதலில் ஆர்எஸ்எஸ் அமைப்பை தடை செய்ய வேண்டும். இது ஒரு மோசமான அமைப்பு. நாட்டில் வகுப்புவாதத்தை பரப்பும் வேளையில் ஆர்எஸ்எஸ் செயல்படுகிறது. பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பை சோதனை செய்தது போலவே ஆர்எஸ்எஸ் அமைப்பையும் சோதனை செய்ய வேண்டும் மற்றும் விசாரித்து தடை செய்ய வேண்டும் என்றார். மேலும் பாஜக அரசை அகற்ற வேண்டிய அவசியத்தை மீண்டும் வலியுறுத்திய லாலு பிரசாத் யாதவ், நாங்களும் நிதிஷ் ஜியும் சோனியா காந்தியை சந்தித்தோம் என்றார். காங்கிரஸ் தலைவர் பதவிக்கு தேர்தல் முடிந்த பிறகு, நங்கள் மீண்டும் சந்தித்து பேசுவோம் என்றார்.

மேலும் படிக்க: மத்திய அரசு அதிரடி; PFI அமைப்பு மீது 5 ஆண்டு கால தடை!

பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பு தடை செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருப்பூரில் இரு வேறு இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்ட இஸ்லாமிய கூட்டமைப்பினர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதேபோல பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (பி.எஃப்.ஐ ) அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து கோவை கோட்டைமேடு பகுதியில் உள்ள பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கோவை மாவட்ட அலுவலகத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மீதானா தடைக்கு கடும் கண்டனம் தெரிவித்த தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பும் அதன் துணை  அமைப்புகளும் சட்டவிரோதமானவை என்று அறிவித்து அவற்றை 5 ஆண்டுகளுக்கு இந்தியாவில் செயல்பட தடை விதித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது எனத் தெரிவித்துள்ளார்.

அதேபோல பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பு மீதான ஒன்றிய அரசின் தடை பாசிசப்போக்கின் உச்சம் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

இந்தியா முழுவதும் கடந்த வாரம் பிஎஃப்ஐ அமைப்புக்குச் சொந்தமான இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இதில் தமிழகத்திலிருந்து 11 பேரையும் இந்தியா முழுவதும் 247 பேரையும் தேசிய புலனாய்வு முகமை கைது செய்துள்ளது.

மேலும் படிக்க: இந்தியாவில் RSS தான் பெரிய தீவிரவாத அமைப்பு: PFI அமைப்பினர்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News