'கால்நடை தீவன ஊழல் வழக்கின்" ராஞ்சி தீர்ப்பை எதிர்த்து ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்வோம் என லாலு பிரசாத் யாதவ் மகன் மகன் தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார்.
பீஹார் முதல்வராக, 1994 -1996-ல் ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவர், லாலு பிரசாத் யாதவ் காங்கிரசை வீழ்த்தி ஆட்சியைப் பிடித்து முதல்-மந்திரி ஆனார். அப்போது, கால்நடை தீவனம் வாங்கியதாக போலி பில்கள் கொடுத்து, அரசு கருவூலத்தில் பணம் எடுத்து, மோசடி நடந்ததாக புகார்கள் எழுந்தன.
இந்த வழக்கு தொடர்பாக சி.பி.ஐ., விசாரணை நடத்தியது. உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, தொடர்புள்ள அனைத்து வழக்குகளும், ஜார்க்கண்ட் மாநிலம், ராஞ்சியில் உள்ள, சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தன இதில் தியோகர் மாவட்ட கருவூலத்தில், ரூ.89.27 லட்சம் எடுத்து, மோசடி செய்தது தொடர்பான வழக்கின் விசாரணை முடிவடைந்தது.
ராஞ்சி சிறப்பு நீதிமன்ற நீதிபதி, சிவ்பால் சிங், கடந்த ஆண்டு டிசம்பரில் தீர்ப்பளித்தார். அப்போது, 'லாலு பிரசாத் யாதவ் குற்றவாளி' என, நீதிபதி அறிவித்தார். இந்த வழக்கில் தொடர்புடைய மேலும், 15 பேரும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு உள்ளனர்.
இதை தொடர்ந்து, குற்றவாளி என அறிவிக்கப்பட்ட லாலு பிரசாத் யாதவ் ராஞ்சி பிர்சா முண்டா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் நேற்று தண்டனை விவரன் அறிவிப்பதாக தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் லாலு பிரசாத் யாதவ்வின் தண்டனை குறித்த விபரம் நாளை அறிவிப்பதாக கூறி மத்திய புலனாய்வு விசாரணை(CBI)நேற்று வழக்கினை ஒத்திவைத்திருந்தது.
இதை தொடர்ந்து, இன்று லாலுவுக்கு சுமார் மூன்றரை ஆண்டு சிறை தண்டனையும், இந்த வழக்கிற்கு 5-லட்சம் அபராதமும் விதித்து ராஞ்சி சிறப்பு நீதிமன்ற தண்டனை அறிவித்தது.
மேலும்,குற்றம் சாட்டப்பட்ட 16 பேரில் 7 பேருக்கு மூன்றரை சிறைத்தண்டனை மற்றும் ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.
இதனை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம் என்று லாலு மகன் தேஜஸ்வி யாதவ் கூறியுள்ளார். மேலும் அவர் கூறும்போது நீதித்துறை அதன் கடமைகளை நிறைவேற்றி உள்ளது. தீர்ப்பை முழுவதுமாக படித்து ஜாமீன் மனுவைத் தாக்கல் செய்த பின்னர் ஐகோர்ட் செல்வோம் என கூறினார்.
People who were creating a scene that Lalu Ji will be scared can now see that he will neither be scared nor kneel or turn away from his ideology: Tejashwi Yadav, RJD #FodderScam pic.twitter.com/oPmEsUoXDH
— ANI (@ANI) January 6, 2018
The judiciary performed its duty. We will go to the High Court after studying the sentence and apply for a bail: Tejashwi Yadav, RJD on #FodderScam pic.twitter.com/17zxjyTQ2d
— ANI (@ANI) January 6, 2018