லோக்சபாவில் ஜிஎஸ்டி மசோதா நிறைவேறியது!

Last Updated : Mar 30, 2017, 08:37 AM IST
லோக்சபாவில் ஜிஎஸ்டி மசோதா நிறைவேறியது! title=

ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி திருத்த மசோதா பார்லிமென்டில் விவாதம் நடந்தது. லோக்சபாவில் நடந்த விவாதத்தில் மசோதா குறித்த பயன்களை மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி விளக்கி உரையாற்றினார்.

இதையடுத்து ஜிஎஸ்டி திருத்த மசோதாவுடன் இணைந்த 4 மசோதாக்கள் லோக்சபாவில் நிறைவேற்ற திருத்தங்கள் வாரியாக குரல் ஒட்டெடுப்பு நடந்தது. இதில் முதலில் துணை 4 மசோதாக்களில் 2 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. பின்னர் அனைத்து மசோதாக்களும் நிறைவேற்றப்பட்டன.

நிறைவேற்றப்பட்ட 4 மசோதாக்கள்:

1. மத்திய ஜிஎஸ்டி மசோதா
2. மாநிலங்களுக்கு இழப்பீடு வழங்கும் சட்ட மசோதா
3.ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி மசோதா
4. யூனியன் பிரதேசங்களுக்கான ஜிஎஸ்டி மசோதா

Trending News