அனைத்து அமைச்சர்களின் ராஜினாமாவை ஏற்ற மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத்

மத்திய பிரதேச அரசியலில் இருந்து அதிர்ச்சி அளிக்கக்கூடிய முக்கிய செய்தி வெளிவந்துள்ளது. அனைத்து அமைச்சர்களும் ராஜினாமா செய்தனர்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Mar 10, 2020, 04:45 AM IST
அனைத்து அமைச்சர்களின் ராஜினாமாவை ஏற்ற மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத் title=

போபால்: மத்திய பிரதேச (Madhya Pradesh) அரசியலில் இருந்து அதிர்ச்சி அளிக்கக்கூடிய முக்கிய செய்தி வெளிவந்துள்ளது. மாநில காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவரான ஜோதிராதித்ய சிந்தியாவின் நடவடிக்கையை கருத்தில் கொண்டு, மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத் (Chief Minister Kamal Nath) திங்கள்கிழமை மாலை அமைச்சரவைக் கூட்டத்தை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் அனைத்து அமைச்சர்களும் ராஜினாமா செய்தனர். அது ஏற்றுக்கொள்ளப்பட்டது.

அதாவது ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு (Jyotiraditya Scindia) நெருக்கமான 17 எம்.எல்.ஏக்கள் பெங்களூரில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். அத்தகைய சூழ்நிலையில், கமல்நாத் அரசாங்கத்தின் ஸ்திரத்தன்மைக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. 

இது மட்டுமல்லாமல், முதலர் கமல்நாத்தின் நிலைமையைக் கருத்தில் கொண்டு, மத்திய பிரதேச பாஜக (BJP) இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 6 மணிக்கு சட்டமன்றக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.

மறுபுறம், முதல்வர் கமல்நாத் (Kamal Nath) "மாஃபியாவின் உதவியுடன் அரசாங்கத்துக்கு எதிராக செயல்பட முயற்சிப்பவர்களை வெற்றிபெற நான் விடமாட்டேன்"" என்றார். எனது மிகப் பெரிய பலம் மத்தியப் பிரதேச மக்களின் நம்பிக்கை மற்றும் அன்பு ஆகும். மாநிலத்தில் அரசாங்கத்தை அகற்ற நினைப்பதை வெற்றிபெற அனுமதிக்க மாட்டேன் என்றார்

Trending News