MP New Chief Minister: மத்திய பிரதேச புதிய முதலமைச்சர் மோகன் யாதவ் - யார் இவர்?

Madya Pradesh New Chief Minister: மத்தியப் பிரதேசத்தின் புதிய முதல்வராக மோகன் யாதவ், துணை முதல்வர்களாக ஜெகதீஷ் தியோரா மற்றும் ராஜேந்திர சுக்லா ஆகியோர் பதவியேற்கவுள்ளனர்.  

Written by - S.Karthikeyan | Last Updated : Dec 11, 2023, 07:52 PM IST
  • மத்திய பிரதேசத்தின் புதிய முதலமைச்சர்
  • மோகன் யாதவ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்
  • சிவராஜ் சிங் சவுகானுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை
MP New Chief Minister: மத்திய பிரதேச புதிய முதலமைச்சர் மோகன் யாதவ் - யார் இவர்? title=

மத்திய பிரதேசத்தின் புதிய முதலமைச்சர்

மத்தியப் பிரதேச முதல்வராக மோகன் யாதவை (Mohan Yadav) பாஜக தேர்வு செய்துள்ளது. அவர்தான் மாநிலத்தின் அடுத்த முதல்வர். பாரதிய ஜனதா கட்சியின் சட்டமன்ற கட்சி கூட்டத்தில் அவரது பெயர் சட்டமன்ற கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டது. இவர் உஜ்ஜைன் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. சிவராஜ் சிங் சவுகான் ஆட்சியில் கல்வி அமைச்சராக இருந்தார். அவர் ஆர்எஸ்எஸூக்கு நெருக்கமானவர் என்றும், ஏபிவிபி மூலம் அரசியலுக்கு வந்தவர் என்றும் கூறப்படுகிறது. மோகன் யாதவ் முதலமைச்சராக பொறுப்பேற்கும் புதிய ஆட்சியில் இரண்டு துணை முதல்வர்கள் இருப்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவரது அரசில் ஜகதீஷ் தியோரா மற்றும் ராஜேந்திர சுக்லா ஆகியோர் துணை முதல்வர்களாக பணியாற்றுவார்கள். எம்பி சட்டமன்றத்தின் அடுத்த சபாநாயகராக முன்னாள் மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் நியமிக்கப்படுவார் என்று பாஜக அறிவித்துள்ளது.

மேலும் படிக்க | 370 சட்டப்பிரிவு ரத்து செல்லும்... ஜம்மு காஷ்மீரில் தேர்தல் - உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு விவரம்!

சிவராஜ் சிங் சவுகானுக்கு வாய்ப்பு இல்லை

மத்திய பிரதேசத்தைப் பொறுத்தவரை அதிக நாட்கள் அம்மாநிலத்தின் முதலமைச்சராக பதவி வகித்தவர் என்ற பெருமைக்குரியவர் சிவராஜ் சிங் சவுகான். மூன்று மூறை அம்மாநிலத்தின் முதலமைச்சராக  இருந்தவர் அவரை சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாகவே பாஜக மேலிடம் புறக்கணிக்க தொடங்கியது. முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் ஆட்சிக்கு கடுமையான எதிர்ப்பு அலைகள் மக்கள் மத்தியில் இருப்பதால் அவர் வெற்றி பெறுவதே கடினம் மற்றும் பாஜக ஆட்சிக்கும் ஆபத்து என பெரும்பாலான கருத்து கணிப்புகள் தெரிவித்தன. இதனால் பிரதமர் மோடியை முன்னிறுத்தியே தேர்தல் பிரச்சாரங்களும் முன்னெடுக்கப்பட்டது.

ஆனால் அத்தனை கருத்துக்கணிப்புகளையும் தவிடுபொடியாக்கி மத்திய பிரதேசத்தில் பாஜக அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருக்கிறது. சிவராஜ் சிங் சவுகானும் அமோக வெற்றியை பெற்றார். இதனால் மீண்டும் முதலமைச்சர் பதவி தனக்கே வழங்கப்படும் என்ற நம்பிக்கையில் இருந்தார் சிவராஜ் சிங் சவுகான். அதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டார். ஆனால், புதிய முகத்துக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என விடாப்பிடியாக இருந்த பாஜக மேலிடம், சிவராஜ் சிங்கை ஓரம்கட்டி இப்போது புதிய முதலமைச்சரை தேர்ந்தெடுத்து இருக்கிறது.  இது அவரது ஆதரவாளர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை உருவாக்கியுள்ளது. 

ஆட்சி அமைக்க உரிமை கோரும் மோகன் யாதவ்

மத்திய பிரதேசத்தின் புதிய முதலமைச்சராக (Madya பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் மோகன் யாதவ், அம்மாநில ஆளுநரை சந்தித்து விரைவில் ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அவருடன் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் துணை முதலமைச்சர்களான ஜகதீஷ் தியோரா மற்றும் ராஜேந்திர சுக்லா ஆகியோரும் பதவி ஏற்க உள்ளனர். மத்திய பிரதேசத்தின் புதிய முதலமைச்சராக பதவி ஏற்கும்போது முதலமைச்சர் மோகன் யாதவ், தன்னுடைய புதிய அமைச்சரவை பட்டியலையும் கொடுக்க உள்ளார்.

மேலும் படிக்க | தாலி கட்டும் நேரத்தில் மணமகனுக்கு ஷாக் கொடுத்த மணப்பெண் -அப்புறம் நடந்தது என்ன?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News