இமாச்சலப்பிரதேச நிலச்சரிவில் சிக்கிக்கொண்ட பிரபல நடிகை...

மலையாள நடிகை மஞ்சுவாரியர், படக்குழுவோடு இமாச்சலப்பிரதேச நிலச்சரிவில் சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், பத்திரமாக மீட்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது!

Updated: Aug 26, 2019, 03:13 PM IST
இமாச்சலப்பிரதேச நிலச்சரிவில் சிக்கிக்கொண்ட பிரபல நடிகை...

மலையாள நடிகை மஞ்சுவாரியர், படக்குழுவோடு இமாச்சலப்பிரதேச நிலச்சரிவில் சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், பத்திரமாக மீட்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது!
 
மலையாள இயக்குநர் சனல்குமார் சசிதரன் இயக்கும் “கய்யாட்டம்” என்கிற புதிய படத்தின் படப்பிடிப்புக்காக நடிகை மஞ்சுவாரியர் உள்பட 30 கலைஞர்கள் இமாச்சலப்பிரதேசம் சென்றுள்ளனர். 

கடந்த மூன்று வாரங்களுக்கு முன்பு படக்குழு ஸ்பிட்டி பள்ளத்தாக்னிக் அருகில் சத்ரு கிராமத்தில் படப்பிடிப்பு நடத்தி வந்துள்னர். இந்நிலையில், கனமழை பெய்ததை அடுத்து தர்மசாலா-காங்ரா சாலையில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டு, இதனையடுத்து அவர்கள் இருந்த சத்ரு கிராமத்தில் சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
 
இதனால் நிலச்சரிவில் சிக்கியுள்ள படக்குழுவினருக்கு உணவுபொருட்கள் விநியோம் தடைபட்டுள்ளது. கையிருப்பு உணவுப் பொருட்கள் 2 நாட்களுக்கு மேல் தாங்காது என மஞ்சு வாரியர், தனது சகோதரர் மது வாரியருக்கு அவசரகால செய்தி அனுப்பியுள்ளார். 250-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அங்கு சிக்கித் தவிப்பதாகவும் அவர் அந்த செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
 
இது தொடர்பாக கேரள வெளியுறவுத்துறை அமைச்சர் வி.முரளீதரனிடம் மது வாரியர் உதவி கோரியுள்ளதாகவும், இமாச்சல் முதலமைச்சர் ஜெய்ராம் தாக்கூரிடம் பேசி உதவி செய்வதாக அவர் உறுதியளித்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது படக்குழுவினர் பத்திரமாக மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கய்யாட்டம் திரைப்பட குழுவினரை தவிர ஸ்பிடி பள்ளத்தாக்கில் 2 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் சிக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.