புது டெல்லி: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கும் மத்திய அரசிற்கும் இடையே நடந்து வரும் அரசியல் யுத்தம் மேலும் தீவிரமடையக்கூடும். இதை மம்தா பானர்ஜி (Mamta Benerjee) சுட்டிக்காட்டியுள்ளார். இன்று (ஜூலை 21), முதல்வர் மம்தா பானர்ஜியும் அவரது கட்சி நிர்வாகிகளும் மேற்குவங்க மாநிலத்தின் தியாகிகள் தினத்தை கொண்டாடினார்கள். கட்சி உருவானதிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 21 அன்று தியாகிகள் தினத்தை (Martyr's Day) திரிணமூல் காங்கிரஸ் கட்சி அனுசரித்து வருகிறது. இந்த விசேஷ சந்தர்ப்பத்தில் கட்சித் தொழிலாளர்கள் மற்றும் மக்கள் மத்தியில் காணொலி வாயிலாக உரையாற்றிய முதல்வர் மம்தா பானர்ஜி, மோடி அரசுக்கு எதிராக கடுமையான தாக்குதலைத் தொடங்கினார்.
மோடி அரசுக்கு பிளாஸ்டர் தேவை: மம்தா
இங்குள்ள மக்கள் (மேற்கு வங்கம்) மாநிலத்தின் வளர்ச்சி மற்றும் அமைதியை விரும்பினார்கள். உங்கள் பண அதிகாரத்தை நிராகரித்தனர். சர்வாதிகாரப்போக்கில் பாஜக இறங்கியுள்ளது என்று மம்தா கூறினார். திரிபுராவில் எங்கள் கட்சியினர் ஏற்பாடு செய்தா நிகழ்ச்சிகள் நிறுத்தப்பட்டன. இது ஜனநாயகமா? மோடி அரசு நாட்டின் அரசியலமைப்பு நிறுவனங்களை அழித்து வருகிறது. அத்தகைய சூழ்நிலையில், இப்போது நாம் அனைவரும் ஜனநாயகத்தை காப்பாற்ற ஒற்றுமையாக போராட வேண்டும். மோடி அரசுக்கு பிளாஸ்டர் தேவை. இப்போது நாம் அதைத் தொடங்க வேண்டும். மோடி அரசும் பாஜகவும் அதிகாரத்திலிருந்து வெளியேற்றப்படாத வரை அவர்கள் இப்படி தான் இருப்பார்கள் என்று மம்தா பானர்ஜி கூறினார்.
மூன்றாவது முறையாக ஆட்சி:
மேற்கு வங்கத்தின் சட்டமன்றத் தேர்தலின் போது மம்தா பானர்ஜியின் "ஒரு கை பார்க்கலாம்" (கெலா ஹோப் - khela hobe) என்ற கோஷத்தை முன்னிறுத்தி பாஜகவுக்கு எதிராக மம்தா கடும் பிரச்சாரம் மேற்கொண்டார் என்பதை உங்களுக்கு நினைவுப்படுத்துகிறோம். அந்த தேர்தலில் வெற்றி பெற்று டி.எம்.சி மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வந்தது. அதுவும் முழு பெரும்பான்மையுடன் பெரும் வெற்றியைப் பெற்றது (213 இடங்கள்) ஆட்சியை பிடித்து மீண்டும் மேற்கு வங்க முதல்வராக மம்தா பானர்ஜிக் அமர்ந்தார். அதே நேரத்தில், மேற்கு வங்காளத்தில் ஆட்சி அமைப்பதாகக் கூறி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய பாஜக, வெறும் 77 இடங்களை மட்டுமே வெற்றி பெற்று ஏமாற்றமடைந்தனர்.
ALSO READ | மேற்கு வங்க மக்கள் நலனுக்காக பிரதமர் மோடியின் காலில் விழத் தயார்: மம்தா பேனர்ஜி
நாட்டையும், ஜனநாயகத்தையும் நீதிமன்றம் காப்பாற்ற வேண்டும்:
பெகாசஸ் (Pegasus) வழியாக உளவு பார்க்கும் பிரச்சினையில் மோடி அரசாங்கத்தை விமர்சித்து பேசிய மம்தா, "இதற்காக பணம் செலவிடப்படுவதாகவும், எதிர்கட்சி தலைவர்கள், பத்திரிக்கையாளர்கள் மற்றும் நீதிபதிகளின் தொலைபேசி எண்கள்" கூட கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் மம்தா கூறினார். பெகாசஸ் உளவு வழக்கை உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து விசாரிக்க வேண்டும் என்றும், மேலும் இந்த நாட்டையும், அதன் ஜனநாயகத்தையும் நீதிமன்றம் மட்டுமே காப்பாற்ற முடியும் எனவும் மம்தா கூறினார்.
சர்வாதிகாரம், பிரிவினைவாத அரசியல் பாஜக:
நாட்டு மக்கள் வேலையில்லாமல் இருக்கிறார்கள். ஒருபக்கம் பெட்ரோல் விலை (Petrol Price) தொடர்ந்து எகிறிக் கொண்டிருக்கிறது. ஆனால் மத்திய அரசு அதில் எல்லாம் கவனம் செலுத்தாமல் வன்முறை, சர்வாதிகாரம், பிரிவினைவாத அரசியல் செய்வதிலேயே கவனமாக உள்ளது.
அதே நேரத்தில், கொரோனா தொடர்பாக மம்தா மோடி அரசாங்கத்தையும் கடுமையாக தாக்கினார். இரண்டாவது அலைகளில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் யாரும் இறக்கவில்லை என்று மத்திய அரசாங்கம் கூறுகிறது. ஆனால் நாட்டு மக்களுக்கு உண்மை என்னவென்று தெரியும். கோவிட்டின் மூன்றாவது அலை குறித்து இப்போது தொடர்ச்சியான எச்சரிக்கைகள் கொடுக்கப்பட்டு வருகிறது, ஆனால் அதற்கான எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மத்திய அரசாங்கம் இதுவரை செய்யவில்லை என்றும் அவர் கூறினார்.
மோடி ஜி, நீங்கள் தவறாக நினைக்க வேண்டாம்:
தற்போது நாட்டின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. மோடி ஜி, நீங்கள் தவறாக நினைக்க வேண்டாம். நான் உங்களை தனிப்பட்ட முறையில் விமர்சிக்கவில்லை, நீங்கள் உங்கள் கட்சியைப் பற்றி மட்டுமே கவலைப்படுகிறீர்கள், ஆனால் நாங்கள் நாட்டின் வளர்ச்சி குறித்து கவலைப்படுகிறோம்.
ALSO READ | மேற்குவங்கத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது மம்தா பேனர்ஜியின் ஆடியோ
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR