அபுதாபியின் முதல் இந்து கோவிலை அலங்கரிக்க உள்ள இந்து காவிய சிற்பங்கள்..!!!

அபுதாபியில் கட்டப்படும் முதல் இந்து கோவிலில் இந்து காவியங்களை சித்தரிக்கும் காட்சிகள்,  சிற்பங்கள் அலங்கரிக்கும்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 10, 2020, 05:45 PM IST
  • அபுதாபியில் கட்டப்படும் முதல் இந்து கோவிலில் இந்து காவியங்களை சித்தரிக்கும் காட்சிகள், சிற்பங்கள் அலங்கரிக்கும்.
  • உலகளாவிய நல்லிணக்கத்திற்கான ஆன்மீக சோலை என அழைக்கப்படும் இந்த கோயிலின் இறுதி வடிவமைப்பு வீடியோவில் காட்டப்பட்டுள்ளது,
அபுதாபியின் முதல் இந்து கோவிலை அலங்கரிக்க உள்ள இந்து காவிய சிற்பங்கள்..!!! title=

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அபுதாபியில் கட்டப்படும் முதல் இந்து கோயிலில் மகாபாரதம், ராமாயணம் மற்றும் புராணங்களிலிருந்து சித்தரிக்கப்படும் காட்சிகளால் அலங்கரிக்கப்படுகிறது.

அபுதாபியில் (Abu Dhabi)  உள்ள முதல் இந்து கோவிலின் முகப்பில் இந்து காவியங்கள், வேத வசனங்கள் மற்றும் இந்தியாவின் புராதனக் கதைகள் மற்றும் வளைகுடா நாடுகளின் பிரபலமான கருப்பொருள்கள் ஆகியவற்றால் சித்தரிக்கப்படும் காட்சிகள் அலங்கரிக்கப்படும் என்று ஒரு ஊடக அறிக்கையில் செவ்வாய்க்கிழமை கூறப்பட்டுள்ளது.

BAPS இந்து மந்திர் கட்டுமானம் குறித்த சமீபத்திய தகவலில், கோயிலின் இறுதி வடிவமைப்பின் காட்சிகள் அதன் இணையதளத்தில் வீடியோவில் வெளியிடப்பட்டதாக வளைகுடா செய்தி தெரிவித்துள்ளது.

உலகளாவிய நல்லிணக்கத்திற்கான ஆன்மீக சோலை என அழைக்கப்படும் இந்த கோயிலின் இறுதி வடிவமைப்பு வீடியோவில் காட்டப்பட்டுள்ளது.

அபு முரைக்கா பகுதியில் உள்ள இந்த வளாகத்திற்குள் ஒரு நூலகம், வகுப்பறை, மஜ்லிஸ் மற்றும் ஒரு சமூக மையம் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

இந்த கட்டிடத்தை வடிவமைப்பை தயாரிக்கும் பணி 2020 ஆம் ஆண்டின் முற்பகுதியில் நிறைவடைந்தது, மேலும் கொரோனா தொற்றுநோயால் பாதிப்பினால், பணி சிறிது தாமதம அடைந்ததாக கோயிலின் செய்தித் தொடர்பாளர் அசோக் கோடெச்சா வளைகுடா செய்திக்குத் தெரிவித்தார்.

"இறுதி வடிவமைப்பின் காட்சிகள் வீடியோ மூலம் வெளியிடப்படுவது இதுவே முதல் முறை" என்று கோடெச்சா கூறினார்.

இந்த கோவிலில், மகாபாரதம், ராமாயணம் மற்றும் புராணங்கள் மற்றும் பிராந்திய வரலாறுகள் ஆகியவை செதுக்கப்பட்டிருக்கும் என்றும், . உண்மையில், இந்த கோவில் ஒரு தனித்துவமான அடையாளத்தை கொண்டிருக்கும் என்றும், இந்தியா பாரம்பரிய முக்கியத்துவம் வாய்ந்த கதைகளையும், வளைகுடாவின் தனித்துவமான வடிவமைப்புகளையும் ஒரு சேர பெற்றிருக்கும் என்று கோடெச்சா கூறியதாக வளைகுடா செய்தி மேற்கோளிட்டுள்ளது.

வரலாற்று சிறப்புமிக்க இந்த கோவிலின் கட்டுமாண பணிகள் இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் (UAE) தலைமையின் வழிகாட்டுதலுடன் முன்னேறி வருகின்றன.

"கோவிட் -19 தொற்று பரவலை தடுக்கும் வகையில்  தொற்றுநோய்களின் போது சிறந்த வகையில் உள்ளூர் நடைமுறைகளை கடைப்பிடித்து, இந்தியாவில் இந்த கோவில் தொடர்பான கல் வேலைகள் தொடர்கிறது," என்று அவர் கூறினார்.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கோயிலுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. டிசம்பர் முதல் பணிகள் தொடங்கப்பட்டன. 2022ஆம் ஆண்டில் கோயில் பணி நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ALSO READ | US Election 2020: ஜோ பிடனுக்கு வாழ்த்து சொல்லாமல் சீனா மவுனம் காப்பது ஏன்..!!!

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News