எனது சார்பாக ஊடகங்கள் மருத்துவர்களிடம் மன்னிப்பு கேட்கலாம்: மம்தா பானர்ஜி

எனது சார்பாக ஊடகங்கள் மன்னிப்பு கேட்கலாம் என மம்தா பானர்ஜி அரசு மருத்துவர்கள் வேலை நிறுத்தம் குறித்து தெரிவித்துள்ளார்!!

Last Updated : Jun 16, 2019, 12:47 PM IST
எனது சார்பாக ஊடகங்கள் மருத்துவர்களிடம் மன்னிப்பு கேட்கலாம்: மம்தா பானர்ஜி title=

எனது சார்பாக ஊடகங்கள் மன்னிப்பு கேட்கலாம் என மம்தா பானர்ஜி அரசு மருத்துவர்கள் வேலை நிறுத்தம் குறித்து தெரிவித்துள்ளார்!!

கொல்கத்தா அரசு மருத்துவமனையில் நோயாளி ஒருவரின் உறவினர்கள் பயிற்சி மருத்துவர்களால் தாக்கப்பட்டனர்.  இச்சம்பவத்தை கண்டித்து மேற்குவங்க மாநிலம் முழுவதும் அரசு மருத்துவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் மாநிலம் முழுவதும் மருத்துவ சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், போராட்டம் நடத்தி வரும் மருத்துவர்களை ஆலோசிக்க வருமாறு முதல்வர் மம்தா பானர்ஜி அழைப்பு விடுத்தார். ஆனால் அதை புறக்கணித்த மருத்துவர்கள், என்ஆர்ஆஸ் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு வருமாறு மம்தாவுக்கு அழைப்பு விடுத்துள்ளனர். 

தங்களுக்கு பாதுகாப்பில்லாத சூழ்நிலை உள்ளதாக மருத்துவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இதனால் மேற்கு வங்க மாநிலத்தில் மருத்துவர்களின் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. 

இந்நிலையில், டாக்டர்கள் வேலைநிறுத்தம் குறித்து முட்டுக்கட்டை போடுவதற்கு செய்தி ஊடகத்திடம் மன்னிப்பு கேட்கலாம் என்று ஒரு பத்திரிகையாளர் மாநாட்டில் உரையாற்றியபோது, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார். 

இதுகுறித்து அவர் கூறுகையில்;

மருத்துவர்களுக்காக தனது பணிகள் அனைத்தையும் ஒதுக்கிவைத்து விட்டு 5 மணி நேரம் காத்திருந்ததாகத் தெரிவித்தார்.

எஸ்மா உள்ளிட்ட சட்டங்களை பயன்படுத்தி பயிற்சி மருத்துவர்களின் எதிர்காலத்தை சிதைக்க விரும்பவில்லை என்றும் கூறினார். தான் திறனற்றவர் எனக் கருதினால் ஆளுநர் அல்லது தலைமைச் செயலாளருடனோ காவல்துறை ஆணையருடனோ பேச்சுவார்த்தை நடத்தலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து நேற்று இரவு செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவர்கள் தங்கள் போராட்டத்தை விரைவில் முடித்துக்கொண்டு பணிகளைத் தொடங்கத் தயாராக இருப்பதாகவும், மாநில அரசுத் தரப்பில் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர நேர்மையான முறையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் குற்றம்சட்டினர்.

இன்று நடைபெறவுள்ள தங்களின் செயற்குழுக் கூட்டத்தில் எங்கு பேச்சுவார்த்தை நடத்துவது என முடிவெடுக்கப் போவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய மம்தா பானர்ஜி பயிற்சி மருத்துவர்களிடம் தான் மன்னிப்பு கோர முடியாது என்றும் தன் சார்பில் ஊடகங்கள் வேண்டுமானால் மன்னிப்பு கோரட்டும் என்று தெரிவித்துள்ளார். மேலும் மருத்துவர்களை போராட்டக் களத்தில் சந்திப்பது குறித்த கேள்விக்கு எங்கு செல்லலாம் எங்கு செல்லக் கூடாது என்பது தனது முடிவுக்கு உட்பட்டது என்று தெரிவித்தார்.

 

 

Trending News