கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு ஹாலிவுட்டில் தொடங்கிய #MeToo என்ற ஹேஷ்டேக், தற்போது சில தினங்களாக இந்தியாவில் மிக வேகமாக பரவி வருகிறது. இந்த ஹேஷ்டேக் மூலம் பெண்களுக்கு எதிராக பாலியல் புகார்கள், குற்றங்கள் வெளிச்சத்துக்கு கொண்டு வரப்பட்டு வருகின்றன. இதில் பெண்கள் தங்களுக்கு எதிரான பாலியல் அத்துமீறலில் குறித்து புகார்களைக் கொடுத்து வருகிறார். இது இந்திய அளவில் பெரும் புயலை கிளப்பி வருகிறது.
சில தினங்களுக்கு முன் மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் மீது #MeeToo மூலம் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை பதிவு செய்து வருகிறார்கள். ஒரு மத்திய அமைச்சர் மீது தொடர்ந்து பாலியல் புகார்கள் குவிந்து வருவதால், அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தி உள்ளது. மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் மீது தொடர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர் பதவியை ராஜினமா உடனடியாக செய்யவேண்டும் காங்கிரஸ் சார்பில் தொடர்ந்து அழுத்தம் தரப்பட்டு வருகிறது.
ஆனால் இதுவரை மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் தரப்பில் இருந்து எந்தவித கருத்தும் கூறப்படவில்லை. அதேபோல பாஜக கட்சியை சார்ந்தவர்களும் கருத்து கூற மறுத்து விட்டனர். ஆனால் பாஜக மாநிலங்களவை எம்.பி சுப்பிரமணியன் சுவாமி அவர்கள், எம்.ஜே. அக்பர் மீதான புகார்கள் தொடர்ந்து வருவதால், இந்த விசியத்தில் பிரதமர் மோடி கண்டிப்பாக பேச வேண்டும் நீ நேற்று கூறியிருந்தார்.
இந்நிலையில், இன்று பாஜக தேசிய தலைவர் அமித் ஷாவிடம் ம்.ஜே. அக்பர் மீதான் பாலியல் புகார் குறித்து கேள்வி கேட்டபோது, #MeToo என்ற ஹேஷ்டேக் மூலம் வந்த புகாரை குறித்து நிச்சயம் விசாரிக்கப்படும். புகார் யார் தந்தது, அவர்களின் பின்னணி என்ன? புகாரின் உண்மைதன்மை என்ன? போன்ற விசியங்களை ஆராய்ந்து, பின்னர் முடிவு எடுக்கப்படும் எனக் கூறினார்.