நான்காம் கட்ட அன்லாக் செப்டெம்பர் மாதம் 1ம் தேதி தொடங்க உள்ள நிலையில் மெட்ரோ ரயில் சேவைகளுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கலாம் என கூறப்படுகிறது.
இருப்பினும், மெட்ரோ சேவைகளை மீண்டும் தொடங்குவதற்கான இறுதி முடிவை மாநில அரசுகள் எடுத்துக் கொள்ளலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதுடெல்லி: கொரோனா பரவல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மெட்ரோ ரயில் சேவைகள், நான்காவது கட்ட அன்லாக் நடவடிக்கையில் அனுமதிக்கப்படலாம் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. ஆனால் பள்ளிகளும் கல்லூரிகளும் மூடப்பட்டு இருக்கும். மேலும் சினிமா அரங்குகள் போன்ற நெரிசலான இடங்களில் கட்டுப்பாடுகள்தொடரும் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. இருப்பினும், மெட்ரோ சேவைகளை மீண்டும் தொடங்குவதற்கான இறுதி முடிவை மாநில அரசுகள் எடுத்துக் கொள்ளலாம் என கூறப்படுகிறது.
டெல்லி மெட்ரோ செப்டம்பர் 1 முதல் சேவைகளைத் தொடங்க வாய்ப்புள்ளது, ஆனால் விரிவான கட்டுப்பாடுகளுடன் இந்த ரயில் சேவை இருக்கும் என, வட்டாரங்கள் தெரிவித்தன.
டெல்லி கொரோனா வைரஸ் நிலைமை மேம்பட்டுள்ளதாக கூறிய டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், சேவையை தொடக்குமாறு விடுத்த வேண்டுகோள் விடுத்தார்.
மேலும் படிக்க| எல்லையில் சண்டை நிறுத்தத்தை மீறும் பாகிஸ்தான்... ராணுவம் தக்க பதிலடி...!!!
ஜூலை 30 அன்று வந்த மூன்றாம் கட்ட அன்லாக் தொடர்பான நடைமுறைகளில், இரவு ஊரடங்கு உத்தரவு நீக்கப்பட்டு, கட்டுப்பாட்டு மண்டலங்களாக இல்லாத பகுதிகளில், யோகா மையங்களை திறக்க அனுமதிக்கப்பட்டன. கல்வி நிறுவனங்கள், பொது மக்களுக்கான பூங்காக்கள் அல்லது சினிமா அரங்குகள் என பெரிய கூட்டங்கள் சேர வாய்ப்புள்ள மற்ற எல்லா பகுதிகளிலும் கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ளன.
மேலும் படிக்க | தலைமுறை கடந்தும் மாறாத தலைமை.. இந்திரா முதல் இன்று வரை நீடிக்கும் ஆதிக்கம்..!!!