உத்தரப் பிரதேசத்தின் மவு நகரைச் சேர்ந்த சிறுமி ஒருவர் ஒரு மாதத்திற்கு முன் வீட்டை விட்டு ஓடிவந்துள்ளார். அவர் உத்தரப் பிரதேசத்தில் இருந்து பீகாரில் உள்ள ஜெய்நகருக்கு வந்துள்ளார். ஜெய்நகரில் உள்ள சந்தைக்கு வந்த சிறுமி, அங்கிருந்த ஒருவரிடம் வழி கேட்டுள்ளார். அப்போது, அர்ஜூன் யாதவ் என்ற அந்த நபர், சிறுமியை கடத்தி சென்று தனது இடத்தில் மறைத்து வைத்துள்ளார்.
மேலும், தனது மூன்று நண்பர்களை அழைத்து, அவர்களுடன் அந்த சிறுமியிடம் கூட்டு பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டுள்ளார். தொடர்ந்து, அந்த வன்புணர்ந்தது மட்டுமில்லாமல் பலரையும் அந்த வன்புணர அனுமதித்துள்ளார். அதில், காவலரும் ஒருவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறுமி காணாமல் போனதை அடுத்து, அவரின் பெற்றோர்கள் காவல் துறையிடம் புகார் அளித்தனர்.
தொடர்ந்து, உத்தரப் பிரதேச காவல் துறையிறனர் மேற்கொண்ட விசாரணையில் சிறுமி பீகாருக்கு தப்பிச்சென்றது தெரியவந்தது. தொடர்ந்து, ஜெய்நகர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும், ஜெய்நகர் காவலர்கள் அந்த தகவலை வைத்து, பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தும் சோனி தேவி என்பவரின் வீட்டில் சோதனை செய்தபோது, அங்கு அந்த சிறுமியை கண்டறிந்தனர்.
சிறுமியை மீட்ட காவல் துறையினர், சோனி தேவியை கைது செய்தனர். தொடர்ந்து, சிறுமியை முதலில் கடத்திய அர்ஜூன் யாதவ், எலெக்ட்ரிஷன் சஜன் குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கடத்திய அர்ஜூன் யாதவ், ஜெய்நகர் சந்தையின் இரவு நேர காவலாளியாக இருந்துள்ளார். இதுகுறித்து போலீசார் கூறுகையில்,"பாதிக்கப்பட்ட சிறுமியிடம் காவலர் உள்பட பலரும் பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டுள்ளனர்.
சிறுமியை கடத்தியவர்கள் சோனி தேவியிடம் 50 ரூபாய்க்கு விற்றுள்ளனர்" என்றனர். மேலும், இந்த வழக்கில், ராம்ஜிவன் பஸ்வான் என்ற ஜெய்நகர் காவலர் தலைமறைவாகியுள்ளார். இதுதொடர்பாக தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு பல இடங்களில் சோதனை செய்யப்பட இருப்பதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ