இன்று பிரதமர் நரேந்திர மோடி ஒரு நாள் பயணமாக தனது சொந்த மாநிலமான குஜராத்துக்கு சென்றுள்ளார். குஜராத்தின் வல்சாத் நகரில் உள்ள ஜூஜ்வா கிராமத்தில் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டப்பணி அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்றார். பின்னர் அந்த விழாவில் பேசிய பிரதமர் மோடி அவர்கள் கூறியதாவது:-
அனைவருக்கும் சொந்த வீடு இருக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் தான் "பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா" திட்டத்தின் மூலம் வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. இந்த திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் கட்டப்பட்டு வரும் வீடுகள் தரமானதாக இருக்கும். குஜராத் மாநிலம் எனக்கு நிறையக் கற்றுக் கொடுத்துள்ளது. அதில் ஒன்று விரைவில் எப்படி நமது கனவுகளை நிறைவேற்ற வேண்டும் என்றும், அதன் அடிப்படையில் எனது கனவானது, நமது தேசம் 2022 ஆம் ஆண்டு 75_வது சுதந்திர தினத்தை கொண்டாடும் போது நமது நாட்டில் சொந்த வீடு இல்லாத ஒரு குடும்பம் கூட இருக்கக் கூடாது என்பதாகும்.
இந்த திட்டத்தில் ஒரு ரூபாய் கூட லஞ்சமாகக் கொடுக்கத் தேவையில்லை. இந்த திட்டத்தின் மூலம் வீடுகளை பெருவோரிடம் கேட்கலாம், நீங்கள் லஞ்சம் கொடுத்தீர்களா? அவர்களை இல்லை என்று சொல்லுவார்கள், இதை ஊடகங்களும், நாடும் முழுவதும் பார்க்கும், அப்பொழுது அது எங்களுக்கு "கௌரவமாக" இருக்கும் என்று கூறினார். மேலும் இந்தத் திட்டம் மூலம் இதுவரையில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வீடுகள் கட்டப்பட்டுள்ளன எனவும் கூறினார்.
காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் பிரதம மந்திரியாக ராஜீவ் காந்தி இருக்கும் போது மத்திய அரசு ரூ. 1 தந்தால், அதில் கமிஷன் போக ஏழைகளுக்கு 15 பைசாக்கள் மட்டும் தான் கிடைக்கும், ஆனால் எங்கள் ஆட்சியில் 1 ரூபாய் தந்தால், அது 100 பைசாவாக ஏழைகளின் வீடுகளுக்கு செல்கிறது எனக்கூறினார்.
Prime Minister Narendra Modi said that it is his dream to ensure that every Indian has his own house by 2022
Read @ANI Story | https://t.co/rzjscxb8lh pic.twitter.com/USyH7kKEcI
— ANI Digital (@ani_digital) August 23, 2018