பீகாரில் அவுரங்காபாத்தில் நக்சலைட்டுகள் திடீர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் 4 பேருந்துக்களை எரித்த நக்சல்கள், ஒருவரை சுட்டு கொன்றுள்ளனர்.
பீகார் மாநிலம் அவுரங்காபாத் மாவட்டத்தில் உள்ள தேவ் என்ற இடத்தில் நேற்றிரவு நக்சலைட்டுகள் வெறியாட்டம் நடத்தினர். இந்த கோர சம்பவத்தில் நான்கு பேருந்துகளை எரித்ததோடு, ஒருவரை சுட்டுக்கொலை செய்துவிட்டு காட்டுக்கள் தப்பி சென்றுள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த CRPF மற்றும் மாவட்ட காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். மீட்பு பணியில் ஈடுப்பட்ட அதிகாரில், நக்சலைகளை தேடும் முயற்சியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
Bihar: Naxals torched four buses and shot dead one person in Dev, in Aurangabad, last night; CRPF and district police present at the spot pic.twitter.com/qg8g4n24yT
— ANI (@ANI) December 30, 2018
பிகாரின் அவுரங்காபாத் பகுதியில் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது இது முதல்முறை அல்ல. முன்னதாக மஹாராஷ்டிராவின் காட்சிரோலி பகுதியில் நின்றிருந்த ட்ரக் ஒன்றினையும் நக்சல்கள் தீயிட்டு எரித்துள்ளனர். அதிர்ஷ்டவசமாக இச்சம்பவத்தில் உயிர்சேதங்கள் ஏதும் நிகழவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
காவல்துறை விசாரணையில் எரிக்கப்பட்ட ட்ரக் ஆனது, குறிப்பிட்ட ஒப்பந்ததாரர் ஒருவரின் வாகனம் எனவும், அவரது 14 வாகனத்தில் எரிக்கப்பட்ட வாகனம் சில நாட்களுக்கு முன்னதாக பழுதாகி காட்டுப்பகுதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளது. நிறுத்தப்பட்ட வாகனத்தினை சீற்செய்து கொண்டுவர அவர் முயற்சித்ததாகவும், ஆனால் அதிகாரிகள் உதவி இன்றி வாகனம் கிடப்பில் இருந்ததாகவும் தெரியவந்துள்ளது.