இளநிலை மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான நீட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் என்பதால் ஏராளமானோர் விண்ணப்பிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
பொது மருத்துவம் (MBBS) மற்றும் பல் மருத்துவம் (BDS) ஆகிய பிரிவுகளில் இளநிலை பட்டப்படிப்பில் மாணவர்கள் சேர்வதற்காக நாடு முழுவதும் நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.
2020 ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வு குறித்த விவரங்களை தேசிய தேர்வுக் குழு (NTA) தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. அந்தவகையில் அடுத்த ஆண்டுக்கான நீட் தேர்வு மார்ச் மாதம் 3 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு கடந்த 2 ஆம் தேதி தொடங்கியது. நீட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் என்பதால் www.ntaneet.nic.in, www.nta.ac.in என்ற இணையதளங்களில் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்ப கட்டணமாக பொது பிரிவினருக்கு ரூ.1500, ஓபிசி மற்றும் பொருளாதாரத்தில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு ரூ.1400, எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகளுக்கு ரூ.800 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் இந்த ஆண்டில் இருந்து நாடு முழுவதிலும் உள்ள ஜிம்பர், எய்ம்ஸ் கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் மருத்துவப் படிப்பில் சேருவதற்கு நீட் தேர்வு கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இளநிலை மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான நீட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க, இன்று 31 ஆம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.