நேபாளத்தில் பாராளுமன்ற, மாகாண சபைத் தேர்தகலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கப்படுள்ளது.
நேபாள நாடாளுமன்றம் மற்றும் 7 மாகாணப் பேரவைகளுக்கான பொதுத் தேர்தலில் முதல் கட்ட வாக்குப் பதிவு கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில் 65 சதவீத வாக்குகள் பதிவாயின. அந்நாட்டில், புதிய அரசியல் சாசனத்தின் கீழ் நடைபெறும் முதல் பொதுத் தேர்தல் இதுவாகும். முதல் கட்டத்தில் நாடாளுமன்றத்துக்கான 37 தொகுதிகளுக்கும் 7 மாகாணப் பேரவைகளில் 74 தொகுதிகளுக்கும் வாக்குப் பதிவு நடைபெற்றது.
உள்ளூர் நேரப்படி காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப் பதிவு, மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது. இப்பகுதியின் மொத்த வாக்காளர் எண்ணிக்கை 31.9 லட்சமாகும். இதில் 65 சதவீதம் பேர் தங்கள் வாக்குகளைச் செலுத்தினர். பாஜுரா மாவட்டத்தில் அதிகபட்சமாக 80 சதவீத வாக்குகள் பதிவாயின.
அதை தொடர்ந்து தற்போது, நேபாளத்தில் பாராளுமன்ற, மாகாண சபைத் தேர்தல்களின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கப்படுள்ளது.
நேபாளத்தில் மொத்தம் 5 மாவட்டங்களில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த மாவட்டங்களில் 12, 235,993 வாக்காளர்கள் உள்ளனர். இவர்கள்,மத்திய பாராளுமன்றத்திற்கான 128 பிரதிநிதிகளையும் மாகாண சபைகளுக்கான 256 பிரதிநிதிகளையும் தேர்ந்தெடுப்பார்கள்.
தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின் படி, நேபாளம் 7,752 வாக்குச் சாவடிகளை ஒதுக்கீடு செய்து 15,344 வாக்குச் சாவடிகளை வாக்காளர்கள் வாக்களித்து வருகின்றனர்.
மேலும்,பிரதம மந்திரி ஷெர் பகதூர் டீபுபா, நேபாள குடிமக்கள் ஜனநாயகத்தின் வாக்களிக்கும் உரிமையைப் பயன்படுத்த வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார்
"உள்ளூர், மாகாண மற்றும் பாராளுமன்றத் தேர்தல்கள் ஆரம்பமாகியுள்ள நிலையில், நாட்டில் அரசியல் மாற்றம் முடிவடையும் என்று நான் நம்புகிறேன்" என பிரதம மந்திரி டீபுபா அறிவித்துள்ளார்.
தேர்தலுக்கு முந்தைய வன்முறை அதிகரிப்பதை தடுக்க, 45 மாவட்டங்களில் ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் 65 போலீசார் பணியாற்றி வருகின்றனர். இது தவிர, இராணுவமும் நிறுத்தப்பட்டுள்ளது.
வாக்குப்பதிவு முடிவடைந்தவுடன், வாக்குப்பதிவு எண்ணிக்கை தொடங்குவதற்கான நடைமுறைகள் பின்னர் தொடங்கும் எனவும், தேர்தலின் இறுதி முடிவு டிசம்பர் 25 அறிவிக்கப்படும் என்றும், எதிர்பார்க்கப்படுகிறது.
Nepal polls: Voting begins in second phase of parliamentary, provincial council elections
Read @ANI story | https://t.co/qAtHpejVS8 pic.twitter.com/36S4RG9WNg— ANI Digital (@ani_digital) December 7, 2017