வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் - ஓம் பிரகாஷ் ராவத் கருத்து

புதிய தலைமை தேர்தல் ஆணையர் ஓம் பிரகாஷ் ராவத், வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என கருத்து தெரிவித்துள்ளார்.

Last Updated : Jan 23, 2018, 10:07 AM IST
வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் - ஓம் பிரகாஷ் ராவத் கருத்து title=

புதிய தலைமை தேர்தல் ஆணையர் ஓம் பிரகாஷ் ராவத், வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என கருத்து தெரிவித்துள்ளார்.

முன்னால் தலைமை தேர்தல் ஆணையராக இருந்த ஏ.கே. ஜோதி நேற்று உடன் ஓய்வு பெற்றார். இதையடுத்து புதிய தேர்தல் ஆணையராக ஓம் பிரகாஷ் ராவத் இன்று பொறுப்பேற்க்கிறார்

இந்நிலையில், செய்தியாளர்களை சந்திப்பில் ஓம் பிரகாஷ் கூறியது பின்வருமாறு,

* ஒரு மாநிலத்திலிருந்து பிற மாநிலங்களுக்கு வேலை நிமித்தமாக சென்றவர்கள் அங்கேயே வாக்களிக்க அனுமதிப்பது குறித்து பரிசீலிக்கப்படும்.

* விரல் ரேகை பதிவு அடிப்படையில் வாக்களிக்க முறையை அமல்படுத்த வேண்டும். இதனால் போலி வாக்காளர் கண்டறிய முடியும். காண முடியும்.

* நாடாளுமன்றம் மற்றும் அனைத்து மாநில சட்டப்சபை தேர்தல்களை ஒரே சமயத்தில் நடத்தலாம். இதன்மூலம் தேர்தல் செலவை மிச்சப்படுத்த முடியும்.

* வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

1977-ம் ஆண்டு மத்திய பிரதேசப் பிரிவைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரியான ராவத் தற்போது தேர்தல் ஆணையராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள மேகாலயா, திரிபுரா மற்றும் நாகாலாந்து மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல்கள் ஓம் பிரகாஷ் ராவத் தலைமையில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Trending News