காஷ்மீரின் வடக்கே பாராமுல்லா மாவட்டத்தில் நான்கு இடங்களில் தேசிய புலனாய்வு முகமை சோதனை நடத்தி வருகிறது!
பாரமுல்லா: ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்டத்தில் 4 இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சோதனையில் அதிகாரிகள் ஈடுப்பட்டு வருகின்றனர்.
இலங்கையில் கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் தேதி ஈஸ்டர் தினத்தன்று ஐ.எஸ். ஆதரவு பயங்கரவாதிகள் 9 இடங்களில் தற்கொலை தாக்குதல் நடத்தினார்கள். இந்த கொடூர நாச வேலையால் 259 பேர் கொல்லப்பட்டனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். AS ஆதரவு பயங்கரவாதிகள் முதலில் தமிழ்நாட்டில்தான் இந்த குண்டு வெடிப்பை நடத்த திட்டமிட்டு இருந்தது தெரிய வந்தது.
தமிழ்நாட்டில் அவர்களுக்கு ஆதரவான சூழ்நிலை கிடைக்காததால் இலங்கை சென்று கொழும்பில் கை வரிசை காட்டி உள்ளனர். இந்நிலையில், சென்னை, நெல்லை, தேனி, ராமநாதபுரம், பெரம்பலூர் உள்ளிட்ட இடங்களில் NIA அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டு பலரை கைது செய்தனர்.
National Investigation Agency(NIA) raids underway at 4 locations in Baramulla district of North Kashmir. More details awaited pic.twitter.com/5XvvpcaGTT
— ANI (@ANI) July 28, 2019
இந்நிலையில், காஷ்மீரின் வடக்கே பாராமுல்லா மாவட்டத்தில் நான்கு இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் இன்று காலை வாகனங்களில் வந்து இறங்கி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். பாதுகாப்பு அதிகாரிகளின் துணையுடன் இந்த சோதனை நடந்து வருகிறது.