நிதி ஆயோக்கின் துணைத்தலைவர் அர்விந்த் பனகரியா தனது பதவியை ராஜினாமா செய்வதாக இன்று அறிவித்துள்ளார்.
மத்தியில் ஆளும் பிரதமர் மோடி ஆட்சி திட்ட கமிஷன் அமைப்பை மாற்றி நிதி ஆயோக் அமைப்பை உருவாக்கினார். இதன் தலைவராக பிரதமர் மோடி உள்ளார். மாநில முதல்வர்கள் இந்த குழுவில் இடம்பெற்றுள்ளனர். இக்குழுவின் துணைத்தலைவராக அரவிந்த் பனகரியா நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில், துணைத்தலைவர் பதவியிலிருந்து விலக உள்ளதாக பனகரியா அறிவித்துள்ளார். அமெரிக்கா சென்று பேராசிரியர் பணியில் தொடர உள்ளதாகவும் அறிவித்துள்ளார். ஆகஸ்ட் 31-ம் வரை அவர் பதவியில் இருப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.