வருமான வரி கணக்கு தாக்கல் இன்றே கடைசி நாள்; தாமதித்தால் ரூ.10000 வரை அபராதம்

வருமான வரி தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் என்றும் தவறாமல் இன்று கணக்கை தாக்கல் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 31, 2019, 10:37 AM IST
வருமான வரி கணக்கு தாக்கல் இன்றே கடைசி நாள்; தாமதித்தால் ரூ.10000 வரை அபராதம் title=

புதுடெல்லி: வருமான வரி அறிக்கையை (ஐ.டி.ஆர்) தாக்கல் செய்ய இன்று கடைசி நாள். வருமான வரி தாக்கல் மேலும் நாட்கள் அதிகரிக்க முடியாது. அதனால் வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாதவர்கள் இன்றுக்குள் தாக்கல் செய்யுமாறும் வருமான வரித் துறை அறிவுறுத்தியுள்ளது.

2018-19-ம் நிதி ஆண்டுக்கான வருமான வரி அறிக்கையை தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் என்று அறிவித்துள்ள நிலையில், சமூக ஊடகங்களில் ஒரு செய்தி வைரலாகி வருகிறது. அதாவது வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய நாட்கள் மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது என்று ஒரு செய்தி பகிரப்படுகிறது. 

இதை அறிந்த சிபிசிடி(மத்திய நேரடி வரி வாரியம்) தந்து ட்விட்டர் பக்கத்தில் ஒரு செய்தியை பகிர்ந்துள்ளது. அதில் வருமான வரி தாக்கல் செய்யும் தேதியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்று தெளிவுபடுத்தியுள்ளது. 2018-19 நிதியாண்டிற்கான வருமான வரி தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி ஆகஸ்ட் 31. அதன் பிறகு ஐ.டி.ஆர் தாக்கல் செய்தால் அபராதம் விதிக்கப்படும் என்று கூறப்பட்டு உள்ளது. 

ஏப்ரல் மாதம் முதல் 2018-19 ஆம் ஆண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும் பணி தொடங்கியது. வருமான வரி தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி ஜூலை 31 என்று முதலில் அறிவிக்கப்பட்டது. பின்னர் அது ஆகஸ்ட் 31 என்று நீட்டிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News