'நாட்டில் வேலைகளுக்கு பஞ்சமில்லை; வட இந்தியாவில் தகுதியானவர்கள் இல்லை': சந்தோஷ் கங்வார்

நாட்டில் வேலைவாய்ப்பு பற்றாக்குறை இல்லை; வேலைகளுக்கு தகுதியானவர்கள் வட இந்தியாவில் பற்றாக்குறையாக இருப்பதாக அமைச்சர் சந்தோஷ் குமார் கங்வார் கருத்து!!

Last Updated : Sep 15, 2019, 03:42 PM IST
'நாட்டில் வேலைகளுக்கு பஞ்சமில்லை; வட இந்தியாவில் தகுதியானவர்கள் இல்லை': சந்தோஷ் கங்வார் title=

நாட்டில் வேலைவாய்ப்பு பற்றாக்குறை இல்லை; வேலைகளுக்கு தகுதியானவர்கள் வட இந்தியாவில் பற்றாக்குறையாக இருப்பதாக அமைச்சர் சந்தோஷ் குமார் கங்வார் கருத்து!!

நாட்டில் வேலைவாய்ப்பு பற்றாக்குறை இல்லை என்றும், வேலைகளுக்கு தகுதியானவர்கள் பற்றாக்குறையாக இருப்பதாக தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்புத் துறை அமைச்சர் சந்தோஷ் குமார் கங்வார் கருத்து தெரிவித்துள்ளார். உத்தரபிரதேச மாநிலம், பரேலியில் நடந்த நிகழ்ச்சியில் பேசுகையில்; நாட்டில் வேலைவாய்ப்பு என்பது அதிகமாக இருக்கிறது. எனவே, வேலைக்கு இங்கு பஞ்சமில்லை. ஆனால், அந்த வேலைக்குத் தகுதியானவர்கள் தான் நம் நாட்டில் இல்லை. வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவிற்கு வரும்பட்சத்தில், அவர்கள் வழங்கும் வேலைக்கு இங்கு தகுதியானவர்கள் இல்லை என்று வெளிநாட்டு நிறுவனங்கள் கூறுகின்றனர். நாட்டில் வேலைவாய்ப்பு நிலைமை குறித்து மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் ஆய்வு செய்து வருகிறது என்று தெரிவித்தார். 

வேலைவாய்ப்பின்மை குறித்து அமைச்சர் கூறிய இந்த கருத்து இளைஞர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அமைச்சரின் இந்த கருத்துக்கு, காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி  கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள அவர், 5 வருடங்களுக்கும் மேலாக ஆட்சியில் உள்ள பாஜக அரசு, புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவில்லை என்றும் வட இந்தியர்களுக்கு தகுதியில்லை என கூறி தப்பிக்க முயற்சிக்க வேண்டாம் எனவும் விமர்சித்துள்ளார்

முன்னதாக நாடாளுமன்றக் கூட்டத்தொடரின்போது, நாட்டில் வேலைவாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக பரபரப்படும் தகவல்கள் பொய்யானவை என்று அமைச்சர் கங்வார் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

 

Trending News