கடவுள் ராமர் கூட குற்றங்களைத் தடுக்க 100% உத்தரவாதம் அளிக்க முடியாது: BJP அமைச்சர்

மக்களுக்கு முழுமையான பாதுகாப்பை உறுதிப்படுத்த கடவுள் ராமரால் கூட உத்தரவாதம் அளிக்க முடியாது என்று நான் நினைகிறேன் என உத்தரபிரதேச அரசாங்கத்தின் அமைச்சர் ரன்வேந்திர பிரதாப் சிங் கூறியுள்ளார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 5, 2019, 08:56 PM IST
கடவுள் ராமர் கூட குற்றங்களைத் தடுக்க 100% உத்தரவாதம் அளிக்க முடியாது: BJP அமைச்சர் title=

லக்னோ: பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து நாடு தழுவிய சீற்றத்திற்கு மத்தியில், உத்தரபிரதேச அரசாங்கத்தின் மந்திரி ஒருவர், "பகவான் ராமர் கூட" மக்களுக்கு முழுமையான பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியாது என்று கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். 

கற்பழிப்புக்கு ஆளானவரை உயிருடன் எரிக்க முயன்றதாக சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதே நேரத்தில், பாதிக்கப்பட்டவருக்கு சிகிச்சைக்காக லக்னோவிலிருந்து டெல்லிக்கு விமானம் மூலம் கொண்டு செல்லப்படுகிறது. இத்தகைய சூழ்நிலையில், உ.பி. யோகி அரசின் அமைச்சர் ரன்வேந்திர பிரதாப் சிங்கின் விசித்திரமான அறிக்கை வெளிவந்துள்ளது. 

செய்தி நிறுவனமான ஏ.என்.ஐ.யின் வீடியோ படி, அமைச்சர் ரன்வேந்திர பிரதாப் சிங்கிடம், ஒவ்வொரு நாளும் பாலியல் பலாத்காரம் செய்யப்படுவதாக கேட்கப்படுகிறது எனக் கேள்வி கேட்டனர். இதற்கு பதிலளித்த அமைச்சர் ரன்வேந்திர பிரதாப் சிங், சமூகம் என்று ஒன்று இருந்தால், அதில் 100 சதவீதம் குற்றங்கள் இருக்காது என்று கூற முடியாது. மக்களுக்கு முழுமையான பாதுகாப்பை உறுதிப்படுத்த கடவுள் ராமரால் கூட உத்தரவாதம் அளிக்க முடியாது என்று நான் நினைகிறேன் என்று கூறினார்.

 

மேலும் பேசிய அவர், ஒரு உறுதி அளிக்க முடியும். அந்த உறுதி என்னவென்றால், குற்றம் செய்தால் தண்டனை கண்டிப்பாக இருக்கும். கடுமையான தண்டனை வழங்கப்படும். அவர்கள் சிறைக்கு செல்வார்கள் என்பது உறுதி எனவும் கூறினார்.

மார்ச் மாதத்தில் தனது கிராமத்தைச் சேர்ந்த இரண்டு ஆண்கள் மீது பாலியல் பலாத்கார வழக்கு பதிவு செய்த உத்தரபிரதேசத்தின் உன்னாவோ மாவட்டத்தைச் சேர்ந்த 23 வயது பெண் ஒருவரை 5 நபர்கள் மண்ணெண்ணெய் ஊற்றி தீயிட்டு கொளுத்தினர். தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட அந்த இளம்பெண் தற்போது உயிருக்கு போராடி வருகிறார். இவர் சிகிச்சைக்காக லக்னோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவர் விமானம் மூலம் டெல்லுக்கு கொண்டு வரப்பட்டு உள்ளார். 

இன்று காலை பெண்கள் பாதுகாப்பு குறித்த கேள்விக்கு உத்தரபிரதேச அரசாங்கத்தின் அமைச்சர் ரன்வேந்திர பிரதாப் சிங் இவ்வாறு பதிலளித்துள்ளார்.

Trending News