ஞாயிற்றுக்கிழமை இரவு சுவாசக் கோளாறைத் தொடர்ந்து Apollo Gleneagles மருத்துவமனையின் ICU-வில் அனுமதிக்கப்பட்ட வங்காள நடிகரும், திரிணாமுல் காங்கிரஸ் MP-யுமான நுஸ்ரத் ஜஹான் திங்கள்கிழமை மாலை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
போதைப்பொருள் பழகத்தின் காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என வதந்திகள் பரவி வந்த நிலையில், தற்போது அவருக்கு மிக நெருக்கமான வட்டாரங்கள் இச்செய்திகளை "வதந்திகள்" என்று நிராகரித்துள்ளன.
முன்னதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை சுவாச பிரச்சனையால் தவித்த ஜஹான் இரவு 9.30 மணியளவில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் அவரது சிகிச்சைக்காக ஒரு மருத்துவ குழு அமைக்கப்பட்டது.
மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்ட "அவர் நிலையான மனநிலையில் இருப்பதாகவும், நலமாக இருப்பதாவும்" தகவல்கள் வெளியாகின. மேலும் அவருக்கு ஆஸ்துமா பிரச்சினை உள்ளது மற்றும் இன்ஹேலர் பயன்படுத்தப்பட்டுளது எனவும் தெரிவிக்கப்பட்டது. அடுத்த சில மணிநேரங்களில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் பின்னர் தகவல்கள் வெளியானது. ஆனால் அவரது உடல்நிலை சற்று மோசமடைந்த நிலையில் மருத்துவமனையில் அவரது இருப்பு நீட்டிக்கப்பட்டது.
இருப்பினும், காவல்துறையின் வட்டாரங்கள் அவரது மருத்துவ பதிவுகளை குறிப்பிடுகையில், மருத்துவ அளவு அதிகமாக இருப்பதைக் குறிக்கின்றன.
அவரது உடல்நிலை மேம்பட்ட பின்னர் திங்கள்கிழமை மாலை அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதனிடையே அவரது மருத்துவமனை பிரவேசம் குறித்த பரவிவரும் ஊகங்கள் பற்றி, அவருக்கு நெருக்கமான வட்டாரம் தெரிவிக்கையில்., "இதுபோன்ற வதந்திகள் இருப்பதை நாங்கள் உணர்ந்தோம்., ஆனால் இவை வெரும் வதந்திகள் தான் என நாங்கள் வலியுறுத்த விரும்புகிறோம்" என தெரிவித்துள்ளனார். ஜஹானின் கணவர் நிகில் ஜெயின் ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் மருத்துவமனையில் இருந்ததாக அந்த வட்டாரம் மேலும் தெரிவித்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை, இந்த ஜோடி ஜெயின் பிறந்த நாளைக் கொண்டாடியது. அவர்களின் கொண்டாட்டங்களின் புகைப்படத்தை ஜஹான் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருந்தார். ஜஹான் ICU-வில் அனுமதிக்கப்பட்ட பின்னர், அவருக்கு அளவுக்கு அதிகமான மருந்து அளிக்கப்பட்டதால் ஒவ்வாமை ஏற்பட்டது எனவும் தற்போது செய்திகள் பரவி வருகின்றன.