முழு அடைப்புக்கு பின் சொந்த மாநிலம் திரும்ப வேண்டும் எனில் இது கட்டாயம்...

மே 3-ஆம் தேதி முழு அடைப்பு நீக்கப்பட்ட பின்னர் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மாநிலத்திற்கு திரும்புவார்கள் என்று எதிர்பார்கும் ஒடிசா அரசு, சொந்த மாநிலத்திற்கு வர விரும்பும் மக்களின் தகவல்களை சேகரிக்க ப்ரதியேக வலைதளத்தை உண்டாக்கியுள்ளது.

Last Updated : Apr 25, 2020, 12:12 PM IST
முழு அடைப்புக்கு பின் சொந்த மாநிலம் திரும்ப வேண்டும் எனில் இது கட்டாயம்... title=

மே 3-ஆம் தேதி முழு அடைப்பு நீக்கப்பட்ட பின்னர் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மாநிலத்திற்கு திரும்புவார்கள் என்று எதிர்பார்கும் ஒடிசா அரசு, சொந்த மாநிலத்திற்கு வர விரும்பும் மக்களின் தகவல்களை சேகரிக்க ப்ரதியேக வலைதளத்தை உண்டாக்கியுள்ளது.

கொரோனா பரவுதகளை கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு முழு அடைப்பில் உள்ளது. இந்நிலையில் இந்த முழு அடைப்பு ஆனது வரும் மே 3-ஆம் தேதி நீக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளையில் வெளி மாநிலத்தில் தங்கியிருக்கும் மக்கள் சொந்த மாநிலத்திற்கு திரும்புவார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் வெளிமாநிலத்தில் இருந்து சொந்த மாநிலத்திற்கு திரும்பும் மக்களை கண்காணிக்கும் பொருட்டும், கொரோனா தொற்றுநோய் பரவுவதைக் கட்டுப்படுத்தும் பொருட்டும் இந்த ப்ரதியேக வலைதளத்தை உருவாக்கியுள்ளது.

இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்ட பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் பிரதாப் ஜெனா, புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் பெயர் மற்றும் முகவரியை www.covid19.odisha.gov.in என்ற வலதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் முழு அடைப்பிற்கு பின்னர், எந்தவொரு வழியிலும் (விமானம் / ரயில் / சாலை) ஒடிசாவுக்கு திரும்ப விரும்பும் எவரும் இந்த படிவத்தை ஆன்லைனிலும் ஆஃப்லைனிலும் பூர்த்தி செய்து பதிவு செய்ய வேண்டும், என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த வலைதளத்தில் அனைவரும் பதிவு செய்வது கட்டாயம் என்று குறிப்பிட்ட பஞ்சாயத்துராஜ் செயலாளர் சிங், பதிவு செய்யாத எவருக்கும் மாநிலத்திற்குள் நுழைய அனுமதிக்கப்படமாட்டர் எனவும் தெரிவித்துள்ளார்.

Trending News