ஓமிக்ரான் பாதிப்பு இந்தியாவில் அதிகரிக்கும்! - டாக்டர் ஏஞ்சலிக்

ஓமிக்ரான் பாதிப்பு இந்தியாவில் அதிகரிக்கும் என்று முதன்முதலில் இந்த தொற்றை கண்டுபிடித்த தென்னாப்பிரிக்க மருத்துவ நிபுணர் கூறியுள்ளார்.   

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 26, 2021, 04:04 PM IST
ஓமிக்ரான் பாதிப்பு இந்தியாவில் அதிகரிக்கும்! - டாக்டர் ஏஞ்சலிக்  title=

இந்தியாவில் ஓமிக்ரான் வைரஸின் பாதிப்பு தற்போது உள்ளதை விட அதிகரிக்கும்,  தடுப்பூசிகள் போட்டுக் கொண்டால் தொற்று பரவுவதை குறைக்க முடியும் என்று ஓமிக்ரான் வைரஸை முதன் முதலில் கண்டுபிடித்த தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த மருத்துவ நிபுணர் ஏஞ்சலிக் கூறியுள்ளார்.  தென்னாப்பிரிக்க மருத்துவ சங்கத்தின் தலைவரான டாக்டர் ஏஞ்சலிக் கோயட்சி கடந்த மாதம் அங்கு இந்த புதிய வகை ஓமிக்ரான் தொற்றை கண்டறிந்தார்.  

ALSO READ | ஒமிக்ரான் வைரஸ்: தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு 100% ஆபத்து உறுதி!

தற்போது இந்த ஓமிக்ரான் வைரஸ் உலகம் முழுவதும் பரவி வருகிறது.  இந்தியாவிலும் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகமாகும் என்று ஏஞ்சலிக் கூறியுள்ளார். எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களின் உடலில் ஓமிக்ரான் வைரஸ் வேகமாக ஒட்டிக்கொள்கிறது.  குழந்தைகளுக்கு ஓமிக்ரான் பாதிப்பு ஏற்பட்டால் ஐந்து முதல் ஆறு நாட்களில் சரி செய்து விடலாம்.  இன்னும் சில மாதங்களில் ஓமிக்ரான் தொற்றின் வீரியம் அதிகரிக்க வாய்ப்புள்ளது.  கொரோனா தொற்றை போல ஓமிக்ரான் தொற்றும் நாளடைவில் செயலிழக்கும் என்ற கருத்துக்கு நான் உடன்படவில்லை.  இது முற்றிலும் சரியாக இன்னும் சில வருடங்கள் ஆகும்.  இந்தியாவைப் பொருத்தவரை இந்த ஓமிக்ரான் தொற்று எண்ணிக்கை மளமளவென்று உயரும்.  ஆனால் இறப்பு எண்ணிக்கை குறைவாகவே இருக்கும்.  

தற்போது பயன்பாட்டில் உள்ள தடுப்பூசிகள் இந்த வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தும்.  தடுப்பு ஊசி செலுத்தி கொண்டவர்களுக்கும், ஏற்கனவே கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கும் ஓமிக்ரான் வைரஸ் வர வாய்ப்புள்ளது.  ஆனால் தடுப்பூசி போடாதவர்களுக்கு ஓமிக்ரான் மிகப் பெரிய பாதிப்பாக இருக்கும்.  ஓமிக்ரான் வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த அனைவரும் முக கவசம் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்று டாக்டர் ஏஞ்சலிக் கூறினார்.

ALSO READ | ’ஒமிக்ரானை எதிர்கொள்ள ஆயத்தமாவோம்’ பிரதமர் மோடி உரை

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News