மீரட்: சி.ஏ.ஏ.வைக் (CAA) கொண்டுவருவதாக நாங்கள் தேர்தல் வாக்குறுதியில் உறுதியளித்ததாக மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார். இந்த மசோதாவை நாங்கள் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தி நிறைவேற்றினோம் தவிர நாங்கள் எந்தக் குற்றமும் செய்யவில்லை. இந்த சட்டத்தை இந்து - முஸ்லீமாக பார்க்கப்பட்டது. ஆனால் அது தவறு. எங்கள் பிரதமரின் முழக்கம் "சப்கா சாத் சப்கா விகாஸ்" (அனைவரும் ஒன்றிணைவோம், வளர்ச்சி காண்போம்) ஆகும். ஆனால் அதை சில சக்திகள் எதிர்க்கின்றன. மதத்தின் அடிப்படையில் நாட்டைப் பிரிக்கக் கூடாது என்று மகாத்மா காந்தி கூறியிருந்தார். யாராவது துன்புறுத்தப்பட்டால் அவருக்கு குடியுரிமை வழங்கப்பட வேண்டும் என்றும் மகாத்மா காந்தி கூறியதை நாங்கள் செய்தோம் என்றார்.
மன்மோகன் சிங் அரசாங்கம் மனசாட்சியுடன் நடந்துக்கொள்ள வேண்டும் என்றும் கூறினார். காங்கிரஸ் சொன்னதை தான் நாங்கள் செய்தோம். நாங்கள் என்ன குற்றம் செய்திருக்கிறோம்?
குடியுரிமைச் சட்டத்தை இன்று காங்கிரஸ் எதிர்க்கிறது. நாங்கள் எந்த மதத்திற்கும் பாகுபாடு காட்ட மாட்டோம். உலகம் முழுவதையும் எங்கள் குடும்பமாக நாங்கள் பார்க்கிறோம். எங்களை இழிவுபடுத்தும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. எங்கள் அரசு NPR ஐ உருவாக்கவில்லை. காங்கிரஸ் உருவாக்கியுள்ளது.
தேசிய பதிவேட்டில் நாட்டு மக்கள் தங்கள் பதிவு செய்யக்கூடாதா? என்று கேள்வி எழுப்பிய அவர், நாட்டின் முஸ்லிமை யாரும் தொட முடியாது எனவும் கூறினார்.
இந்தியா துண்டு துண்டாக உடையும் என முழக்கங்கள் வைக்கப்படுகிறது. இப்படி கூறுவதற்கு உரிமையை யார் கொடுத்தார்கள். இந்தியா மிகவும் வலுவடைந்து வருகிறது. இந்தியாவை எதிர்க்க யாருக்கும் தைரியம் இல்லை. இந்தியா மீது கை வைக்க உலகின் எந்த நாட்டுக்கும் துணிவு கிடையாது. இந்தியாவை நோக்கி கண்களை உயர்த்த எந்த நாட்டிற்கும் தைரியம் இல்லை. நமது நாட்டின் எல்லை பிரச்னையை பாதுகாப்பு வீரர்கள் பார்த்து கொள்வார்கள். நமது ராணுவத்தின் மீது நம்பிக்கை வையுங்கள் என்றுக் கூறினார்.
பாகிஸ்தான் மட்டுமல்ல, அமெரிக்கா கூட மதச்சார்பு நாடுதான். ஆனால் இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு. எனவே நாட்டில் உள்ள முஸ்லிம் மக்களை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது. எனவும் கூறினார்.
CAA மற்றும் NRC பிரச்சினையில், உங்களுக்குள் பீதியை உருவாக்குவதன் மூலம் நாங்கள் வெற்றி பெற விரும்பவில்லை என்று கூறினார். இதயங்களை வெல்வதன் மூலம் வெற்றி பெற விரும்புகிறேன். நாங்கள் அளித்த வாக்குறுதியை நாங்கள் நிறைவேற்றுவோம்.
2022 ஆம் ஆண்டுக்குள் சொந்த வீடுகள் இல்லாத குடும்பம் இருக்காது. இதுபோன்ற பல படிகள் உள்ளன. அதேபோல 2024 க்குள் உங்கள் வீட்டில் குழாய் மூலம் குடிநீர் வந்து சேரும் என்றார்.
உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.