புதுடெல்லி: அரியானா மாநிலம் பிவானியில் தற்கொலை செய்து கொண்ட முன்னாள் ராணுவ வீரர் ராம் கிஷன் கிரேவால் உடலுக்கு இறுதி சடங்கு தொடங்கியது.
ஒரே பதவி - ஒரே ஓய்வூதியம் நடைமுறைப்படுத்த வலியுறுத்தி ஓய்வுபெற்ற ராணுவத்தினர் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த போராட்டத்தில் அரியானா மாநிலம் பிவானி மாவட்டத்தை சேர்ந்த ஓய்வுபெற்ற ராணுவ வீரரான ராம் கிஷன் கிரேவால் என்பவரும் பங்கேற்றிருந்தார். போராட்டத்தின் போது அவர் தனது குடும்பத்தாரை கைபேசி மூலம் தொடர்புகொண்டு ஒரே பதவி - ஒரே ஓய்வூதியம் நடைமுறைப்படுத்த வலியுறுத்தி தற்கொலை செய்துகொள்ளப் போவதாக தனது மகனிடம் தெரிவித்துள்ளார். இந்நிலையில் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் ராம் கிஷன் கிரேவால் நேற்று காலை விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார்.
டெல்லியில் உள்ள ராம் மனோகர் லோகியா மருத்துவமனையில் இருக்கும் ராம் கிஷன் கிரேவாலின் உறவினர்களை சந்தித்து ஆறுதல் கூற ராகுல் காந்தி மற்றும் டெல்லி துணை முதல்-மந்திரி மணிஷ் சிசோடியா ஆகியோரை சென்றனர். ஆனால் அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். அந்த தடையைமீறி ஆஸ்பத்திரிக்குள் நுழைய முயன்ற ராகுல் காந்தியை டெல்லி போலீசார் கைது செய்து சில மணி நேரம் கழித்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
இதேபோல் டெல்லி முதல் மந்திரி கெஜ்ரிவால், ராம் கிஷனின் குடும்பத்தினரை சந்திப்பதற்காக ஆஸ்பத்திரிக்கு காரில் செல்ல முயன்றார். அவரை சுற்றி வளைத்த போலீசார் உள்ளே நுழைய அனுமதிக்கவில்லை. அவரையும் போலீசார் கைது செய்தனர். அதன்பிறகு அவரையும் விடுதலை செய்தார். கெஜ்ரிவால் இறுதியாக 6 மணி நேரத்திற்கு பின்பு விடுதலை செய்தனர்.
அரியானா மாநிலம் பிவானி மாவட்டத்தில் உள்ள அவரது சொந்த கிராமத்தில் இறுதிச் சடங்கு நிகழ்ச்சிகள் நடக்கிறது. இதில் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி மற்றும் அரவிந்த் கேஜ்ரிவால் கலந்து கொண்டனர். மேலும் முன்னாள் ராணுவ வீரரான ராம் கிஷன் கிரேவாலின் இறுதி சடங்கில் பொதுமக்கள் ஏராளமான கலந்து கொண்டனர்.
கிரேவால் குடும்பத்துக்கு ஆறுதல் கூறினார் அர்விந்த் கெஜ்ரிவால். மேலும் அவர், ராம் கிஷன் கிரேவால் நாட்டிற்காக தன் உயிரை தியாகம் செய்துள்ளார். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக இருக்கிறோம் என்று தெரிவித்தார். மேலும் டெல்லி அரசு சார்பில் ராம் கிஷன் கிரேவால் குடும்பத்திற்கு 1 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்படும். மேலும் அவருக்கு தியாகி அந்தஸ்து வழங்கப்படும் என்றும் அர்விந்த் கெஜ்ரிவால் அறிவித்தார்.
Will go to their village and meet Ram Kishan ji's family there today
— Arvind Kejriwal (@ArvindKejriwal) November 3, 2016