இந்தியாவில் 12,000 விவசாயிகள் ஆண்டுக்கு தற்கொலை செய்து கொள்வதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
விவசாயிகள் தற்கொலை தொடர்பாக, உச்சநீதிமன்றத்தில் தன்னார்வ அமைப்பு தாக்கல்செய்த மனு, நேற்று விசாரணைக்கு வந்தது.
விவசாயிகள் தற்கொலை தடுக்க மத்திய அரசு என்ன நடவடிக்கை எழுப்பியுள்ளது என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியது .
இதற்கு பதிலளித்த மத்திய அரசு, விவசாயிகள் மரணத்துக்குத் தீர்வு காண, நிதி ஆயோக்கிற்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது' என்று பதில் அளித்தது. அதற்கு உச்சநீதிமன்றம், 'எத்தனை பணியைத்தான் நிதி ஆயோக்கிடம் வழங்குவீர்கள்? என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
மேலும் நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில் அளித்த, ஏழை விவசாயிகளின் பிரச்னைகளைக் கேட்டறிந்து வருகிறோம். 2022-ம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானத்தை இரு மடங்கு உயர்த்தத் திட்டமிட்டுள்ளோம்.
கடந்த 2013-ம் ஆண்டு முதலே இந்தியாவில் ஆண்டுக்கு சராசரியாக 12,000 விவசாயிகள் தற்கொலை செய்துகொள்கின்றனர்.
அதிகபட்சமாக, மஹாராஷ்டிராவில் 4,291 விவசாயிகள், கர்நாடகாவில் 1,569 விவசாயிகள், தெலங்கானாவில் 1,400 தற்கொலைசெய்து கொண்டனர், தமிழகத்தில் 606 விவசாயிகள் தற்கொலைசெய்துள்ளனர் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.